Enable Javscript for better performance
Arguments by Mr. Shekhar Naphade|காவிரி நீர் ஒதுக்கீடு தொடர்பாக சேகர் நபாதே முன் வைத்த் வாதங்கள்...- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  காவிரி நீர் ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தின் சார்பில் சேகர் நபாதே முன் வைத்த் வாதங்கள்...

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published On : 05th March 2018 11:29 AM  |   Last Updated : 05th March 2018 11:29 AM  |  அ+அ அ-  |  

  Shekar_Naphade

  காவிரித் தீர்ப்பு - 4; நீர் ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் சேகர் நபாதே முன்வைத்த வாதங்கள் - 1
  (Arguments by Mr. Shekhar Naphade advanced on behalf of State of Tamilnadu as regards the allocation of water on various heads)

  காவிரி ஆறு சம்மந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பின் 368 முதல் 383 பக்கங்களில் கற்றறிந்த மூத்த வழக்கறிஞர் சேகர் நபாதே அவர்களின் நீர் ஒதுக்கீடு  தொடர்பான வாதங்கள்.

  S.2. திரு . சேகர் நபாதே சமர்ப்பிப்புகள் (Submissions of Mr. Shekhar Naphade)

  320. திரு.நபாதே, மூத்த வழக்கறிஞர், “ஹெல்சிங்கி விதிகள், 1966 சர்வதேச நீர் வளங்கள், பற்றிய காம்பியொன்  சர்வதேச சட்ட சங்க விதிகளின் ஒருங்கிணைப்பு (Campione Consolidation of the International Law Association Rules on International Water Resources),1987 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளின் தேசியநீர் கொள்கைகள், தொடர்புடைய வரலாற்று அம்சங்கள் மற்றும் பதிவுகள் சான்றுகள் உட்பட, பல ஆவணங்களால் இந்த நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் சார்பில் வாதங்களைத் திறந்து வைத்தார். மேலும் அவர் 1956 சட்டத்தின் நோக்கம், விரிவு மற்றும் பல பிரிவுகள் இடையேயுள்ள தொடர்பு பற்றி சுட்டிக்காட்டினார்.
   
  1956 சட்டத்தின் பிரிவு 2(c)-இல் குறிப்பிட்டுள்ள “ஒப்பந்தம்”இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அனைத்து ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன மற்றும் இந்த பிரிவின் கீழ் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் வரம்பு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

  மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பயன்பாடு, விநியோகம் அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பாக, 1947-க்கு முந்தைய ஒப்பந்தங்களைக்  கூட இந்த சூழ்நிலையின் கீழ் கொண்டு வந்தனர். எனவே, 1892 மற்றும் 1924 உடன்படிக்கைகள் இந்த சட்டத்தின் நோக்கத்திற்கு உட்பட்டவை அல்ல என்ற கர்நாடகாவின் சமர்ப்பிப்பு ஆதாரமற்றவை. நதி ஒரு நீரியல் அலகு என்றும் அரசியல் எல்லைகளால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் சமர்ப்பிக்கிறார்.

  321. பின்னர், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதற்கு சில புள்ளிவிவர தகவல்கள் மற்றும் சான்றுகள் அவர் இந்த நீதிமன்றத்தில் வைத்தார். ஹெல்சிங்கி விதிகள், 1966 இன் சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு நீர் சமமான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

  கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் அனைத்து துறை சார்ந்த பயன்பாடுகளுக்கும்  அதிகமான நீர் தேவை கோரிக்கையை வைக்கிறது. மேட்டூர் அணை வரை காவிரி நதி தென் மேற்கு பருவமழைகளால் வலுவடைகிறது. ஆனால்மேட்டூர் அணையின் கீழ்நிலை பகுதிகள் சூறாவளி புயல்களுடன் கூடிய  வடகிழக்கு பருவமழைகளால் இப்படுகை ஒழுங்கற்ற, நம்பமுடியாத கடுமையான மழைப்பொழிவும் விவசாய விளைச்சல் பாதிப்பும் உள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின்  தாக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.  அதேசமயம் தமிழ்நாடு,   மேட்டூர் அணையின் கீழ்ப் பகுதிகள் வடகிழக்கு பருவமழையினால்  சுமைகளையே எதிர்கொள்கிறது. இந்த கணிக்க முடியாத தன்மை காரணமாக, நீர்ப்பாசனத்திற்கு வடகிழக்கு பருவமழையை நம்பியிருக்க முடியாது என கர்நாடகாவின் சாட்சிகளும் கூட சான்றுரைத்துள்ளதை அவர் வலியுறுத்தினார்.

  அவர், சல்தானா அறிக்கையை 1977 இல் 124 டி.எம்.சி எண்ணிக்கைக்கு மேலான   நீர் சேமிப்புத் திறனையும், குறிப்பாக அதில் உள்ள விளக்கப்படம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, கர்நாடகா அதிகப்படியான தண்ணீர் சேமித்து வைத்திருப்பது, மாநிலங்களுக்கு இடையே   மேலும் சிக்கல்களுக்கு காரணமாகும்   என்று அவரது பயத்தை வெளிப்படுத்தினார்.


  322. இரண்டு மாநிலங்களின்  மண் திறன் அம்சங்களில், தமிழ்நாட்டில் உள்ள களிமண் நெல் சாகுபடிக்கு சிறந்தது, கர்நாடகாவின் சிவப்பு, பழுப்பு / பின்புல மண் உலர் பயிருக்கு மிகவும் ஏற்றது என அவர் சமர்ப்பித்துள்ளார்.

  கர்நாடகாவின் சாட்சிகளின் அடிப்படையில், கர்நாடகா அரிசிப்பயிர் மற்றும் இரண்டாவது அரிசிப்பயிர் விளைவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என வாதிட்டார் அவர்,  ஏனெனில், தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நெல்லின் நீர்த்தேவை, கர்நாடகாவில் அதே அளவு நெல் உற்பத்தி செய்வதற்கான தேவையை விட கணிசமாக குறைவாக உள்ளது. மேலும்   தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நெல் பயிர்கள் அதிக உற்பத்தித்திறன் உள்ளது என சமர்ப்பித்துள்ளார்.  அதுமட்டுமல்ல  C.C. படேல் குழுவின் சிபாரிசுகள் காலாவதியானது மற்றும் கர்நாடகா அதை நம்பியிருப்பது நியாயமற்றது எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார் .

  323. அவர் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மூன்று முக்கிய நெல் பயிர்களான குருவை, தலாடி மற்றும் சம்பா   பயிர்களை வளர்க்க நீர் தேவைகள்   மற்றும் அவற்றின் சாகுபடிக்குத் தோதான  தமிழ்நாட்டின் பருவநிலை எவ்வாறு பயிரிட உகந்ததாக இருக்கிறது என்பதையும் உறுதிபடுத்தினார்.    ஒருங்கிணைந்த பயிர் முறை , மண் வகைகள் காரணமாக தமிழ்நாட்டில் இரண்டாவது  நெல்  பயிர் வளர்ச்சிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. கர்நாடகா   இரண்டாம் போக அரிசி பயிர் வளர்ச்சி தடை செய்யப்பட வேண்டும்  மற்றும் அதன் முதல்போக அரிசி பயிர் அளவைக் குறைக்கப்பட வேண்டும் என அவர்  தமது வாதத்தில் சமர்ப்பித்துள்ளார். கர்நாடகாவின் கபினி மற்றும் ஹேமாவதி நீர்ப்பாசன திட்டங்கள் சம்மந்தமான தரவு மற்றும் ஆதாரங்களில் அவர்  நம்பிக்கை  வைத்துள்ளார்.  இந்த திட்டங்கள்  1892 மற்றும் 1924 ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியது மற்றும் இதனால் தமிழ்நாட்டின் நீர் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என  வாதிட்டார். 

  கர்நாடகா, ஹேமாவதி திட்டத்தை தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்டியது மட்டுமின்றி திட்டத்தின் விவரங்களை தமிழ்நாட்டிற்கு விவரமாக வழங்கவுமில்லை. 1892 மற்றும் 1924 ஒப்பந்தத்தின் படி இது கட்டாயமானது என சமர்ப்பிக்கப்பட்டது. ஹேமாவதி நீர்த்தேக்கத்தின் மொத்த சேமிப்புத் திறன்  தமிழ்நாட்டிற்கு சேமிப்புக்காக எடுத்துச்செல்லும் உபரி தண்ணீரையும் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கபினி திட்டம் அணையின் கீழ் உள்ள வடிகால் மாநிலத்திற்கு நீரை நிராகரிக்கும் முறையில் கர்நாடகா முன்மொழிந்தது. அணை தளத்தில் தண்ணீர் முழு விளைச்சலுக்கு பயன்படுத்த வேண்டும் மற்றும் வடிகால் மாநிலங்களுக்கு தண்ணீர் மறுக்கப்படும் வகையில், கர்நாடகா கபினி திட்டத்தை முன்மொழிந்தது. 

  கபினி நீர்த்தேக்கம் தமிழ்நாட்டிற்கான, கீழ்நிலை நீர் ஓட்டத்தை குறைத்துவிட்டது. இதனால், தமிழகத்தின் தற்போதைய பயன்பாட்டை பாதிக்கிறது. கர்நாடகா  கூடுதலாக நீர்ப்பாசன திட்டங்களை உயர்த்த பல முன்மொழிவுகளை சமர்ப்பித்தது. தீர்ப்பாயம் தன் இறுதி தீர்ப்பில் இதை வெளிப்படையாக அனுமதிக்கவில்லை.   இருந்தாலும்,   கர்நாடகா கபினியின் துணை படுகையில்(Sub-Basin) அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க மறுக்கிறது. 

  324.  தீர்ப்பாயம்,    கர்நாடகாவுக்கு தவறாக சேர்க்கப்பட்ட 3.44 லட்சம் ஏக்கர் பரப்பளவையும் சேர்த்து  18.853 லட்சம் ஏக்கர் நிலத்திற்கான மொத்தமாக தண்ணீர் வழங்கிவிட்டது. அதை நியாயப்படுத்த எந்த ஆதாரமோ அல்லது அர்த்தமோ இல்லாமல் தகுதி அடிப்படையில் தவறாக அனுமதிக்கப்பட்டது என சேகர் நபாதே தனது வாதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.  இதனால், மொத்தம் 18.853 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 3.44 லட்சம் ஏக்கர் குறைக்கப்பட வேண்டும். ஜூன் 1990 ஆம் ஆண்டில் இருந்த பரப்பளவிற்கு, தடை செய்யப்பட வேண்டிய பகுதிக்கு நாள் குறித்ததை  பற்றி தீர்ப்பாயத்தில் வைத்த வாதத்தை பாரபட்சம் இல்லாமல் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், கர்நாடகாவின் கரிஃப் நெல் சாகுபடிக்கான  நாட்கள் எண்ணிக்கை 145 முதல் 125 நாட்கள் வரை குறைக்கப்பட வேண்டும்.  அவர்  பதிவில் உள்ள சான்றுகள் அடிப்படையில் மற்றும் நிபுணர் கருத்துப்படி அதிக அளவு தண்ணீரை கர்நாடகா வீணாக்குவதற்கு பொறுப்பு என்பதால்   கர்நாடகா அதன் நெல் பயிர் சாகுபடியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆதாரங்கள் தீர்ப்பாயத்தால் பரிசீலிக்கப்படவில்லை. அவர் கர்நாடகாவை, கோடை காலத்தில் வருடப் பயிர் மற்றும் உள்நாட்டு தேவைகளை தவிர,   முக்கிய நீர் நீர்த்தேக்கங்களான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணா ராஜா சாகரா மற்றும் கபினியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கூடாது,  மற்றும் இவற்றையும்  ஒழுங்குமுறை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என சமர்ப்பித்திருந்தார். அவர், கர்நாடகா மேட்டூருக்கு மேல் எல்லையில் மற்றொரு அணை கட்டும் வாய்ப்பை கவனிக்க வேண்டும், அதன் மூலம் நீரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியும் எனக் கூறினார். 

  325. பெங்களூரில் சுமார் 64% பகுதிகள் படுகைக்கு வெளியே இருப்பதால் பெங்களூரின் நீர் வழங்கல் தேவைகளை நிர்ணயிக்கும் போது தீர்ப்பாயம்  தேவையில்  1/3 வது மட்டுமே பரிசீலித்தது சரி என வாதிட்டார். பெங்களூருவுக்கு வழங்கப்படும் தண்ணீர், நியாயமாக ஒதுக்கீடு, டிரான்ஸ்-பேசின் கொள்கைகள்,    தேசிய நீர் கொள்கை   மற்றும் ஹெல்சிங்கி விதிகள், 1966 முழுமையான மீறலே. இத்தகைய டிரான்ஸ்-பேசின் திசைமாற்றம் தீங்கு விளைவிப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.   தீர்ப்பாயம் 2025 ஆவது  ஆண்டின் நீர் திட்டங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கர்நாடகாவின் விவாதம், தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அவசியம் என்பதால்  அதே அளவில்  விநியோகிக்கப்பட வேண்டும் என சமர்ப்பித்துள்ளார். கர்நாடகா நகரமைப்புச் சட்டம் / விதிகள் பின்பற்றவில்லை. தேர்வு செய்யப்படாத மற்றும் திட்டமிடப்படாத பெங்களூரு வளர்ச்சி மற்றும்   பெங்களூருவின் நீர் வழங்கல்  முறைகளும் திட்டமிடப்படவில்லை என்பது   1976 ஆம் ஆண்டு அதன் மாஸ்டர் பிளானில் (MASTER PLAN )இருந்து பெங்களூருவின் உள்நாட்டு நீர் தேவைகள் கணிசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற தெளிவான உண்மை வெளிப்பட்டது. கர்நாடகா, பெங்களூரு வெளியிடும் கழிவுநீர் நீரை சுத்திகரிக்கவில்லை, மேலும், காவிரியிலும் இந்த கழிவு விடப்படுகிறது,  இது தமிழ்நாட்டிற்குள் பாய்கிறது.   அத்தகைய கழிவுநீரைக் கையாண்டாலே,  கர்நாடகா   பெங்களூருவுக்கு. ஒரு பெரிய அளவு தண்ணீர் பெற முடியும். எனவும் அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp