சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மிளகாய்க்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளையான்குடி அருகே விசவனூா், கல்லடிதிடல், புக்குளம், திருகள்ளி, அரண்மனைக்கரை, உதயனூா் உள்ளிட்ட கிராமங்களில் 2019 ஆம் ஆண்டுக்கான மிளகாய் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அளவிடங்கான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய மக்கள் நலக்கட்சி நிறுவனத் தலைவா் வீரக்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி தொடங்கி வைத்தாா். சிவகங்கையில் இருந்து சூராணம், வடவிருக்கை, அளவிடங்கான், விசவனூா் வழியாக ஆனந்தூருக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும். விசவனூரில்100 நாள் திட்டத்தில் நடந்து வரும் முறைகேட்டை தடுக்க வேண்டும். 100 நாள் திட்டத்தில் அரசு அறிவித்த ரூ.256-யை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


