எதுக்கு ஓய்ச்சல் ஒழிவின்றி உடம்பை கெடுத்துக் கொள்கிறாய்? 

மக்கள் திலகம் எம்.ஜி,.ஆர் நடித்த படங்கள் என்றால் நான் ஒன்றைக்கூட பார்க்காமல் விடுவதில்லை.
எதுக்கு ஓய்ச்சல் ஒழிவின்றி உடம்பை கெடுத்துக் கொள்கிறாய்? 
Published on
Updated on
1 min read

மக்கள் திலகம் எம்.ஜி,.ஆர் நடித்த படங்கள் என்றால் நான் ஒன்றைக்கூட பார்க்காமல் விடுவதில்லை. சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவருடைய படங்கள் என்றால் தவற விடுவதே இல்லை. உண்மையை மனம் விட்டு சொல்கிறேன். என் தந்தையை அவர் தம்பி என்றுதான் பாசத்தோடு அழைப்பார். என் தந்தையும் அவரை தன்னுடைய மூத்த அண்ணனாக கருதி ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது நண்பர்களுக்கு தெரியும். அவருக்கு தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் படம் எடுத்தால், அதில் நல்ல கேரக்டர்கள் இருந்தால் என் தந்தைதான் நடிப்பார்.

முதன்முதலில் டைரக்டர் பாரதிராஜாவினால் ' அலைகள் ஓய்வதில்லை' படத்தினில் நடிக்கின்ற பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தப் படத்தை என் தந்தையார் முதலில் மக்கள் திலகத்திற்குத்தான் போட்டுக் காட்டி, அவருடைய ஆசி எனக்கும் மற்ற கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று கருதினார்.  மக்கள் திலகம் படத்தை வந்து  பார்த்து விட்டு, டைரக்டர் பாரதிராஜாவையும் மற்ற கலைஞர்களையும் என்னையும் ஒவ்வொரு காட்சியாக ரசித்து பாராட்டியதை மறக்கவே முடியாது.

'அலைகள் ஓய்வதில்லை' வெள்ளி விழாவிலும்கலந்து கொண்டு பரிசுக்கேடயங்களை அவரது பொன்னான கரங்களால் வழங்கியதுடன் மட்டுமின்றி, எனக்கு அறிவுரையும் கூறினார்.

நான் பல படங்களில் தொடர்ந்து இரவு பகலாக கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டிய  நிலை ஏற்பட்டு விட்டது.இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சலினால் வீட்டில் ஓய்வாக இருக்க நேர்ந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் வீட்டில் போன் மணி அடித்தது.

எதுக்கு ஓய்ச்சல் ஒழிவின்றி வேலை பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்கிறாய்?  உடல்நிலைதான் முக்கியம். அது நன்றாக இருந்தால்தான்  நிம்மதியாக தொழில் செய்ய முடியும். மார்க்கெட் போனாலும் பிடித்துக்கொள்ள முடியும். ஆனால் 'ஹெல்த்' மிகவும் முக்கியம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போனில்   மக்கள் திலகம் எம்.ஜி,.ஆர் தான் உரிமையோடு இப்படி என்னை கடிந்து கொண்டார்.

அவர் மீது எனக்கு இருந்த மதிப்பு மரியாதையை இது மேலும் பன் மடங்காக்கி விட்டது. அவர் போல் இதற்கு முன்னாலும் சரி, பிற்காலத்திலும் சரி யாரும் இருக்கவே முடியாது.

பேட்டி: நாகை  தருமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.09.82 இதழ்)    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com