பழுதடைந்த சிக்னல்...

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை 24 மணி நேரமும் இடைவிடாத போக்குவரத்து நெரிசல் கொண்டது.
Published on

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை 24 மணி நேரமும் இடைவிடாத போக்குவரத்து நெரிசல் கொண்டது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த குரோம்பேட்டை நியுகாலனி ஆறாவது குறுக்குத்தெரு, ஜிஎஸ்டி சாலையி சந்திப்பில் சிக்னல் வசதியுள்ளது.

குரோம்பேட்டை ரயில் நிலையத்துக்கும், பேருந்து நிலையத்துக்கும் சென்று வர பாதசாரிகள் ஜிஎஸ்டி சாலையைக் கடக்க அமைக்கப்பட்ட "பாதசாரிகளுக்கான சிக்னல்' கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யாமல் பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் நெரிசலான ஜிஎஸ்டி சாலையைக் கடக்க மிக சிரமப்படுகின்றனர். போக்குவரத்துக் காவல் துறை உடனடியாக பழுதடைந்துள்ள சிக்னலை சரி செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com