08.12.1985: 'சார்க்' அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று!

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்றழைக்கப்படும் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று.
08.12.1985: 'சார்க்' அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று!
Published on
Updated on
1 min read

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்றழைக்கப்படும் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று.

SAARC (South Asian Association for Regional Cooperation) என்பது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை பரஸ்பரம் வலுப்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை  உறுப்பு நாடுகளாக கொண்டு இந்த அமைப்பானது டிசம்பர் 8, 1985 அன்று உருவாக்கப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 2007 -ல் நடைபெற்ற இந்த அமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

எனவே தற்பொழுது 8 நாடுகள் சார்க் அமைப்பில் முழுமையான அங்கம் வகிக்கும் நாடுகளாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com