
இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 5-ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட உள்ளது.
2015-ஆம் ஆண்டு டிசம்பர் மதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின் படி, நவம்பர் 5-ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.
எப்போதாவது ஒரு முறை அதிசயமாக நேரக் கூடிய ஒரு இயற்கை சீற்றம்தான் சுனாமியாகும். ஆனால் மிகவும் பயங்கரமானது. கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால் மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர் மாண்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில் பலியாகியிருக்கின்றனர்.
முன்கூட்டியே கணித்து துரித அறிவிப்பு செய்வதன் மூலம் நம்மால் சுனாமியினால் உண்டாகும் உயிர்பலிகளைக் குறைக்க முடியும். ஆனால் அதை செய்வதற்கு தனி நபர் மற்றும் சமுதாய விழிப்புணர்வு என்பது அவசியமான ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.