15.11.1986: இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்த தினம் இன்று!

சானியா மிர்சா மும்பையில் 15.11.1986 அன்று பிறந்தார்.இவரது தந்தை இம்ரான் மிர்சா விளையாட்டு துறை பத்திரிகையாளர். தாயார் நசிமா.
15.11.1986: இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்த தினம் இன்று!
Published on
Updated on
1 min read

சானியா மிர்சா மும்பையில் 15.11.1986 அன்று பிறந்தார்.இவரது தந்தை இம்ரான் மிர்சா விளையாட்டு துறை பத்திரிகையாளர். தாயார் நசிமா. தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். முதலில் அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார். அவர் முதலில் ஐதராபாத்தில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். 2003ம் ஆண்டு முதல் டென்னிஸ் விளையாட்டை அதிகார்பூர்வமாக தொழிலாக்கிக் கொண்டார்.

உலக மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசை மற்றும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையும் பெற்று முதன்முதலாக இந்திய அளவில் மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்ற பெருமைக்குரியவரானார்.

மேலும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் உயரிய இடம் பிடித்த முதல் இந்திய   பெண்மணி என்ற நற்பெயரையும் கொண்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியிடம் ஜோடி சேர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புகழை அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com