09.10.1967: புரட்சியாளன் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று!

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா  14.06.1928 அன்று அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார்.
09.10.1967: புரட்சியாளன் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று!
Published on
Updated on
1 min read

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா  14.06.1928 அன்று அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இளமையிலேயே புரட்சிகர நோக்கங்கள் கொண்டவராகவும், வாசிப்பில் ஆர்வமுடையவராகவும் இருந்தார்.

இவர் மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற  போராளி எனப் பன்முகங்களைக்கொண்டவர்.

சே குவேரா 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில்  தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். அது ஒரு பெரிய விழிப்பு உணர்வை  அவருக்கு உண்டாக்கியது.

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. சே குவேரா புதிய கியூப அரசில் பல முக்கியமான பதவிகளை  வகித்திருந்தார்

சிறிது காலத்தில் பொலிவியா போன்ற இதர நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்ற இடத்தில் 09.10.1967 அன்று சே குவேரா சட்டவிரோதமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com