செப்டம்பர் 11 - அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்த தினம் இன்று

2001-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி காலை 8.45 மணி.பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது  .....
செப்டம்பர் 11 - அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்த தினம் இன்று
Published on
Updated on
1 min read

2001-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி காலை 8.45 மணி.பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது  அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மைய பகுதியில் அமைந்திருந்த இரட்டை கோபுரங்களில் உள்ள உலக வர்த்தக மைய அலுவலகம்.

அந்த சமயம் அமெரிக்க ஏர்லைன்ஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 வகை விமானம் ஒன்று 20000 கேலன் அளவுள்ள எரிபொருளுடன்,வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் மீது மோதியது.இதன் விளைவாக உடனடியாக நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

எதிர்பாராத விபத்து என்று எண்ணி, இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி  நடந்து கொண்டிருக்கும் போதே, முதல் தாக்குதலுக்கு பின்னர் சரியாக 18 நிமிடங்கள் கழித்து மற்றொரு போயிங் 767 வகை விமானம் ஒன்று தெற்கு கோபுரத்தின் மீது மோதியது.

இதன் விளைவாக பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.  பலர் மாண்டனர். அமெரிக்கா அதிர்ந்தது. தீவிரவாதத்தின் கோர விளைவுகளை  உலகம் உணர்ந்து கொண்ட நாள் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com