20.01.1930: அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின் பிறந்த தினம் இன்று!

அமெரிக்காவின் புகழ் பெற்ற விண்வெளி வீரரும் , விமானியுமான பஸ் ஆல்ட்ரின் (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின்) ஜனவரி 20, 1930 அன்று பிறந்தார்.
20.01.1930: அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின் பிறந்த தினம் இன்று!
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் புகழ் பெற்ற விண்வெளி வீரரும் , விமானியுமான பஸ் ஆல்ட்ரின் (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின்) ஜனவரி 20, 1930 அன்று பிறந்தார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.

அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக ஜூலை 21, 1969 இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com