
1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றினை சோவியத் ரக்ஷய செய்லபடுத்தியது. அந்த திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் யூரி ககாரினும் ஒருவர். இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது.
கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.
ககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.