ராமோஜியம் ( நாவல்)

ராமோஜியம் ( நாவல்) - இரா.முருகன்; பக்.624; ரூ.600;  கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; -044 - 4200 9603. 
ராமோஜியம் ( நாவல்)
Published on
Updated on
1 min read

ராமோஜியம் ( நாவல்) - இரா.முருகன்; பக்.624; ரூ.600;  கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; -044 - 4200 9603. 

"பொடி'  என்ற பெயரில் எழுதப்பட்ட  சிறுகதை - "ராமோஜியம்'  என்னும்  பெரிய நாவலாக  உருவெடுத்திருக்கிறது. 

ராமோஜிராவ் - ரத்னாபாய்  தம்பதிகள் 17-ஆம்  நூற்றாண்டு  தொடங்கி  20-ஆம்  நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் - இறக்கிறார்கள். தங்கள்  விருப்பு வெறுப்புகளின்படி  வாழ்கிறார்கள். ராமோஜி - ரத்னாபாய்  காதல்  அரும்பியது  ( 1935), சென்னையில்  இவர்களின்  திருமணம்  ( 1937),    ஜப்பான்  விமானம்  குண்டு போடுதல் (1943) - ரத்னா பாயின்  அண்ணன் மகள்  பூப்பெய்துவது - டில்லிக்கும்,  காசிக்கும் செல்வது (1944)- ராமோஜிராவ் தம்பதிக்கு குழந்தை வரம்  வேண்டி  திருக்கருகாவூர்  பயணம் மேற்கொள்வது  (1945) - என்று ஆண்டுகள்  குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்களை இணைத்து  எழுதப்பட்டுள்ளதால் இது ராமோஜியின்  சுயசரிதம்  போன்ற தோற்றத்தையும்  தருகிறது.   

 ஃப்ளாஷ்பேக் உத்தியில் - பதினேழாம்  நூற்றாண்டில்  மேற்குக் கடற்கரையைத் தனது  கட்டுப்பாட்டில்  வைத்திருக்கும் மராத்திய கப்பல்  படைத்தலைவன் சுனோஜி ஆங்க்ரேவுடன்  பணியில்  சேர்வது  - சரபோஜி ஆங்க்ரே ஆவது, சாகசங்கள்  நிகழ்த்துவதும்,  
பதினெட்டாம் நூற்றாண்டில் - புதுச்சேரி  பிரெஞ்சுக் கவர்னர்  டூப்ளேயின்  துபாஷி  ஆனந்தரங்கம்  பிள்ளை சுகவீனத்துடன் இருக்க, அவருக்குப் பதிலாக   ராமோஜி பணியில்  சேர்ந்து  நாட்டிய நாடகம் அரங்கேற்றும் முயற்சிகளில்   ஈடுபடுகிறார்.  சுவாரசியமான நாவல். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com