ராஜராஜ சோழன் - ராகவன் சீனிவாசன் (தமிழில் ஸ்ரீதர் திருச்செந்துறை) பக்:216; ரூ.250, சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆ 81480 66645.
ராஜராஜசோழனின் வரலாற்றை பல ஆய்வாளர்கள் நாவல்களாகவும், நாடகங்களாகவும் பதிவு செய்துள்ளனர். கிருஷ்ண தேவராயருடன் வாழ்ந்த தூனிஸ் பயஸ் போல ராஜராஜனுடன் இருந்து நேரில் கண்டதைக் கூறியவர் யாரும் இல்லை. ராஜராஜனின் சிலை, ஓவியம் கூட கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு மன்னனை இன்று நினைவு கூர்கிறோம் என்றால் அவரின் சாதனைகள்தான். இன்று வரை கல்வெட்டுகளும், செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் ராஜராஜனின் புகழைப் பாடுகின்றன.
ராஜராஜனுக்கும் மெளரியப் பேரரசனுக்கும் உள்ள ஒற்றுமையை பல்வேறு நிகழ்வுகள் மூலம் நூலின் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். ராஜராஜனின் புகழ், அரசியல் சூழ்ச்சிகள், சமூக நிலைப்பாடு, சோழர்களின் வளர்ச்சி, வீழ்ச்சி என பல்வேறு வரலாற்று தகவல்களைத் தரும் ஆய்வு நூல் முறையில் தொகுத்திருந்தாலும் படிப்பவருக்கு எளிதில் புரியும் வகையில் படைத்திருப்பது சிறப்பு.
ஆதித்த கரிகாலனின் மரணம், ராஜராஜன் அரியணை ஏறியது, பிற நாடுகளின் மீதான படையெடுப்பு முதல் சமூக நிகழ்வுகள் வரை ஒவ்வொரு தகவலையும் ஆதாரங்களுடன் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். வெற்றிகளால் ஒரு பேரரசை உருவாக்கும் எண்ணம் கொண்ட அரசனின் கண்ணோட்டத்தை அறியலாம்.
வரலாற்று ஆசிரியர்கள் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் காலகிரமத்தைக் கடைப்பிடிக்காமல் நூலாசிரியர் வாசகர்களுக்கு வகுப்பு எடுப்பது போல் அமைந்துள்ளது.
தமிழரின் பாரம்பரியத்தை உண்மையான மூலங்கள் வழியாக அறிய விரும்புவோருக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.