வட கிழக்கு இந்தியா

நேபாளம், பூடான் போன்றவற்றின் சிறப்புகளும் இடம்பெற்றுள்ளன. நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பொருத்தமான படங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு இந்தியா
Published on
Updated on
1 min read

வட கிழக்கு இந்தியா (அஸ்ஸாம் சகோதரிகள்)- மாதவரம் இரா.உதய்பாஸ்கர்; பக்.322; ரூ.350; அசோக்குமார் பதிப்பகம், சென்னை-51; ✆ 99406 78478.

வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, நாகலாந்து, மணிப்பூர், மிஸோரம், மேகாலயம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களை 'ஏழு சகோதரிகள்' என்று அழைப்பர். இந்த மாநிலங்களின் வரலாறு அஸ்ஸாமில்தான் தொடங்கியது. தவிர, போர்கள், நதி வளங்கள், இயற்கை, ஆன்மிகத் தலங்கள், வீர வரலாறு, கட்டடக் கலைகள், சிற்பக் கலைகள், மலைவாழ் மக்களின் இயல்புகள், அவர்களின் நடவடிக்கைகள், இலக்கியங்கள், வேட்டையாடும் திறன்கள், பள்ளத்தாக்குகள், வனச் சரணாலயங்கள், ராணுவ நடவடிக்கைகளும் கண்காணிப்புகளும், இன்றைய தேவைகள் என்று அவற்றின் முழு தகவல்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார் நூலாசிரியர்.

அந்த மாநிலங்களின் 14-நூற்றாண்டு வரலாறுகளான மன்னர்கள் காலம் தொடங்கி, அவர்களின் வரலாறு, ஆட்சித் திறன்களோடு இன்றைய அரசியல் சூழல் வரையில் அலசி ஆராய்ந்துள்ளார். கோயில்கள், புத்த விஹார்கள் போன்ற தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1951-இல் நாகா தனி நாடாக வேண்டும் என்று கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் விரும்பியதும், அந்த ஆண்டு பொதுத்தேர்தலை மக்கள் புறக்கணித்ததும், ஜவாஹர்லால் நேரு பரந்த மனப்பான்மையோடு நாகா இனத்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது, நாட்டிலேயே அதிக மழை பொழியும் சிரபுஞ்சி, மூதாதையர் உயிர்நீத்தால் அவர்களது சாம்பலை தங்கள் உணவோடு சேர்த்து உண்டு தங்களோடு சேர்ந்திருப்பதாகக் கருதுதல் உள்ளிட்ட எண்ணற்ற தகவல்கள் நிறைந்துள்ளன.

நேபாளம், பூடான் போன்றவற்றின் சிறப்புகளும் இடம்பெற்றுள்ளன. நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பொருத்தமான படங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

Summary

Specialties from Nepal and Bhutan are also featured.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com