
உள்ளம் கவர்ந்த உயர்ந்தோர் - சோலை தமிழினியன்; பக்.176; ரூ. 200; சோலைப் பதிப்பகம், சென்னை-600011 ✆ 98405 27782.
தான் சந்தித்துப் பழகி வியந்த 32 சான்றோர்களைப் பற்றி திங்களிதழ் ஒன்றில் எழுதியதைத் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர்.
எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அனைவருக்கும் பிடித்தவராய் சிலர் வாழ்வதுண்டு. அப்படி வாழ்ந்தவர்களில் சிலரைப் பற்றி வியத்தகு செய்திகளுடன் வந்திருக்கும் நூல் இது. அழியாப் புகழுடன் தங்களது துறைகளில் சாதனைகள் பல படைத்த சிறந்த ஆளுமைகளை நமக்குக் காட்டுகிறது இந்நூல்.
தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், திரைக் கலைஞர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வரிஆலோசகர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என ஏராளமான பிரபலங்களை போதுமான தரவுகளுடன் உயர்த்தி இருக்கிறார். இந்த நூலை வாசிக்கும்போது, இதுவரை நாம் கேள்விப்படாத சிலரைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஆசிரியர் உயர்த்தும் அந்த நாயகர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான குணம் உள்ளது. அதுதான் ஈகை. அதில் பெரும்பாலானவர்கள் தமிழார்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியப்படவைக்கிறது.
ஒரு சிலரின் சாதனைகளை ஓரிரு பக்கங்களில் நூலாசிரியரால் கூறி முடிக்க முடியவில்லை. அத்தனை தரவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரபலங்களும் சந்தித்துள்ள சவால்களும், சாதனைகளும் வாசகனுக்கு ஒரு பாடம்.
குறிப்பாக, திரைத் துறையின் எஸ்.பி.முத்துராமன், நடிகர் டெல்லி கணேஷ், கல்வித் துறையில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், இலக்கியத்தில் மு.மேத்தா, முத்துலிங்கம் என நாமறிந்த பிரபலங்களின் வாழ்வின் ஏற்றங்களையும், தற்கால வீழ்ச்சிகளையும், அதை அவர்கள் சமாளித்தவிதம் எனப் பதிப்பித்துத் தந்திருக்கும் இந்தப் புத்தகமானது ஒரு சுவாரஸ்ய தொகுப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.