
ஆண்களைப் படுத்தும் பிராஸ்டேட் பிரச்னைகள் - விளக்கங்களும், சிகிச்சை முறைகளும்; பேராசிரியர் கே.வி.எஸ்.சுந்தரம்; பக்.248; ரூ.250; கற்பகம் புத்தகாலயம், சென்னை 600017 ✆044- 24314347
ஐம்பது வயதைக் கடந்த ஆண்கள் எதிர்கொள்ளும் உடல்நிலை அச்சுறுத்தல்களில் பிராஸ்டேட் சுரப்பி எனப்படும் விந்தணு சுரப்பி பாதிப்புகள் முதன்மையானவை. அதுகுறித்த புரிதலையும், விழிப்புணர்வையும் எளிமையான நடையில் விளக்கும் நூல் இது. அமெரிக்காவில் நேரிடும் புற்றுநோய் உயிரிழப்புகளில் முதன்மையானதாக பிராஸ்டேட் புற்றுநோய் உள்ளதாக கூறும் நூலாசிரியர், அதனை அந்த நிலைக்கு கொண்டு செல்லாமல் முன்கூட்டியே தடுப்பதற்கான வழிமுறைகளை விளக்கியிருக்கிறார்.
ஆணின் உடலில் பாதாம் விதை அளவு கொண்ட ஒரு சுரப்பியை முறையாக கவனித்து பராமரிக்காவிட்டால் உயிரைப் பறிக்கும் எமனாக அது உருவெடுக்கும் என்ற உண்மையை தெளிந்த எழுத்துகளில் கடத்தியுள்ளார்.
உடற்கூறியலில் பிராஸ்டேட் சுரப்பிகளின் பங்கு, அதன் பணி, அதில் ஏற்படும் பாதிப்புகளுக்கான காரணங்கள், அறிகுறிகள், பரிசோதனைகள் ஆகியவை குறித்த விவரங்கள் நூலை முழுமையாக்குகிறது.
ஆங்கில மருத்துவத்துக்கு மாற்றாக சித்தா, ஆயுர்வதேம், விதை சிகிச்சைகள் என பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் பிராஸ்டேட் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வழிகாட்டப்பட்டுள்ளது.
இதைத் தவிர பாதிப்புகளை தடுப்பதற்கும், தீர்ப்பதற்குமான யோகாசனங்கள், உடற்பயிற்சிகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. வர்மக் கலை, அக்குபிரஷர், ஹோமியோபதி, இயற்கை வழி மருத்துவம் என ஒருங்கிணைந்த முறையில் எப்படி பிராஸ்டேட் பிரச்னையை குணப்படுத்த முடியும் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பிராஸ்டேட் என்பது அலட்சியப்படுத்த வேண்டிய சுரப்பி அல்ல; அது ஓர் அதிமுக்கிய அங்கம் என அனைத்து ஆண்களுக்கும் உணர்த்தும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.