தலைக்காயம்

வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் போல வாசகர்களுக்கு தலை காக்கும் கவசம் இந்நூல்.
தலைக்காயம்
Published on
Updated on
1 min read

தலைக்காயம் - டாக்டர் ஆ. திருவள்ளுவன்; பக்.280; ரூ.600; தமிழ்நாடு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூட்டமைப்பு, புத்தூர், திருச்சி- 620017; ✆ 877 8145894; 9894356498.

மனித உடலின் தலைமைச் செயலகமாக விளங்கும் மூளை மற்றும் தலைப் பகுதியைப் பற்றி எளிமையாக விளக்கும் மருத்துவ நூல்.

இதயம்,நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட மூளை பகுதிக்கோ, தலைப் பகுதிக்கோ நாம் அளிப்பதில்லை. ஆனால் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் அதுதான் ஆணிவேராக இருக்கிறது என்ற உண்மையை உணர்த்தி இருக்கிறது இந்த நூல். தலைக்காயத்தால் நாள்தோறும் 47 பேர் விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் என்பது தரவு. அது குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் விலைமதிப்பற்ற உயிர் பறிபோக காரணம் என்கிறார் நூல் ஆசிரியர். அதற்கு தீர்வு காணும் வகையில் தலையின் மேற்பரப்பில் தொடங்கி எலும்பு பெட்டகம், மூளை மற்றும் அதனை சுற்றியுள்ள பாகங்கள்,அவற்றின் பணிகள் உடலின் பிற உறுப்புகளுக்கு மூளையுடன் ஆன தொடர்பு, தலையில் ஏற்படும் காயங்கள், அதனால் ஏற்படும் நரம்பு சார்ந்த பாதிப்புகள் என அனைத்து விஷயங்களும் நுட்பமாக நூலில் விளக்கப்பட்டுள்ளது.

வயது வந்தவர்கள், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளின் தலைமைப்பு நூலில் வேறுபடுத்தி காட்டி விரிவாக விவரித்து இருப்பது கூடுதல் சிறப்பு. பெரியவர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளுக்கு ஏற்படும் தலைக்காயங்கள் குறித்த எளிமையான புரிதலையளிக்கிறது. மருத்துவம் தொடர்பான அத்தனை கலைச்சொற்களையும் துளியும் பிறமொழிக் கலப்பின்றி தூய தமிழில் மொழியாக்கம் செய்து வாசகர்களுக்குப் புரியும் வகையில் விவரித்திருப்பது பாராட்டத்தக்கது.

மிக நேர்த்தியான வடிவமைப்பு, அச்சாக்கம், வரைபடங்கள் ஆகியவை சலிப்பை ஏற்படுத்தாமல் இந்த மருத்துவ நூலை வாசிக்க வைக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் போல வாசகர்களுக்கு தலை காக்கும் கவசம் இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com