இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் விளையாடவுள்ளதாக ஆஸி. கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நாளை முதல் தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.
காயம் காரணமாக கடந்த இரு டெஸ்டுகளிலும் விளையாடாத டேவிட் வார்னர், சிட்னி டெஸ்டில் விளையாடுவதாக ஆஸி. கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
நிச்சயமாக டேவிட் வார்னர் விளையாடுகிறார். அவர் அற்புதமான வீரர். அணி வீரர்களிடையே உற்சாகத்தை உருவாக்கி, நம்பிக்கையை ஏற்படுத்துபவர். அவர் நன்றாக விளையாட ஆரம்பித்தால் எதிரணிக்கு அழுத்தம் ஏற்படும். யாருக்கு எதிராக விளையாடினாலும் டேவிட் வார்னர் அணியில் இருந்தால் நாங்கள் மேலும் சிறந்த அணியாக இருப்போம். எங்களுடைய நடு வரிசையை காக்கக் கூடியவர். பந்துவீச்சாளர்கள் சோர்வில் இருக்கும்போது லபுசான், ஸ்மித் களமிறங்குவார்கள். அது எங்களுக்குச் சாதகமாக அமையும். அணியில் வார்னர் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இதுவரை மிகச்சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

