சென்னை ஓபன்: காலிறுதியில் டிப்சரேவிச், கோபின்
சென்னை,ஜன.5: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு செர்பியாவின் டிப்சரேவிச், பெல்ஜியத்தின் டேவிட் கோபின் ஆகியோர் முன்னேறினர். வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தை


சென்னை,ஜன.5: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு செர்பியாவின் டிப்சரேவிச், பெல்ஜியத்தின் டேவிட் கோபின் ஆகியோர் முன்னேறினர்.
வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் டிப்சரேவிச் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியையும், பெல்ஜியத்தின் டேவிட் கோபின் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆன்ட்ரியாஸ் பெக்கையும் வீழ்த்தினர்.
இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதிச் சுற்றில் மோதுகின்றனர். யூகி பாம்ப்ரி வெளியேறியதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஒரே இந்தியர் யூகி மட்டுமே.
17-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பதால் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதிபெற்ற டிப்சரேவிச், தரவரிசையில் 346-வது இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரியை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீûஸ டிப்சரேவிச்சிடம் இழந்தார் யூகி. மிக எளிதாக யூகியின் சர்வீûஸ முறியடித்து முன்னிலை பெற்றார் டிப்சரேவிச். இருப்பினும் 3-வது கேமில் இரண்டு அதிரடியான சர்வீஸ்கள் மூலம் தனது சர்வீûஸ கைப்பற்றினார் யூகி. இதன் பிறகு டிப்சரேவிச்சின் ஆக்ரோசமான ஸôர்ட்களுக்கு யூகியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5 மற்றும் 7-வது கேமில் யூகியின் சர்வீûஸ முறியடித்த டிப்சரேவிச், 6-1 என்ற கணக்கில் வென்று முதல் செட்டை 23 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
ஆனால் இரண்டாவது செட்டில் யூகி பாம்ப்ரி, டிப்சரேவிச்சுக்கு நிகராக ஆடினார். இதனால் 3-வது கேமில் கடும் போராட்டத்திற்குப் பிறகே டிப்சரேவிச் தனது சர்வீûஸ தன்வசமாக்கினார். இருப்பினும் 4-வது கேமில் யூகியின் சர்வீûஸ முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் டிப்சரேவிச். இறுதியில் இந்த செட்டை 6-3 என்ற கணக்கில் டிப்சரேவிச் கைப்பற்றினார். இதனால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார் டிப்சரேவிச்.
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டிப்சரேவிச் முன்னணி வீரர் என்றாலும், அவருக்கு கடும் சவால் அளித்தார் யூகி. மேலும் யூகி, சில நல்ல ஸôர்ட்களை கையாண்டதன் மூலம் மைதானத்தில் டிப்சரேவிச்சை அங்கும், இங்கும் ஓடவிட்டார். யூகி பந்துகளை தூக்கி அடித்தபோதும், டிப்சரேவிச் பந்துகளை மிகவும் தணிவாகவே அடித்தார். இதுவும் யூகிக்கு பலவீனமாக அமைந்தது.
கோபின் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 174-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் டேவிட் கோபின், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஆன்ட்ரியாஸ் பெக்கை சந்தித்தார். முதல் சுற்றில் சகநாட்டு வீரரும், முன்னணி வீரருமான சேவியர் மலிûஸ வீழ்த்திய நம்பிக்கையோடு களம் கண்டார் கோபின். ஆனாலும் இந்த ஆட்டத்தின் முதல் செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீûஸ பெக்கிடம் இழந்தார் கோபின். இந்த செட்டில் பெக் சற்று விழிப்போடும், வேகமாகவும் விளையாடினாலும், கோபின் நிதானமாக விளையாடினார். கடைசிக் கட்டத்தில் கோபின் போராடியபோதும், அந்த செட் 6-4 என்ற கணக்கில் பெக்கின் வசமானது. முதல் செட் 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்ட கோபின் 4-வது கேமில் பெக்கின் சர்வீûஸ முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
இதன்பிறகு ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. 9-வது கேமில் கோபினின் சர்வீûஸ பெக் முறியடிக்க பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த கேமிலேயே பெக்கின் சர்வீûஸ முறியடித்து 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோபின்.
பின்னர் நடைபெற்ற 3-வது செட்டில் இருவரும் கடுமையாகப் போராடினர். ஆனாலும் ஆட்டத்தை முழுவதுமாக தன் வசமாக்கினார் கோபின். இதனால் 4 மற்றும் 6-வது கேமில் பெக்கின் சர்வீûஸ முறியடித்து அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார் கோபின். இதன்மூலம் கோபின் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 17 நிமிஷங்கள் நீடித்தது.
களமிறங்காமல் காலிறுதிக்கு வந்த அல்மாக்ரோமற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் அல்மாக்ரோவை எதிர்த்து விளையாடவிருந்த பெல்ஜியத்தின் ஸ்டீவ்
டார்சிஸ் காயம் காரணமாக விலகினார். இதனால் 2-வது
சுற்றில் விளையாடாமலேயே அல்மாக்ரோ நேரடியாக காலிறுதிக்குத் தகுதிபெற்றார். தரவரிசை அடிப்படையில் அவர் ஏற்கெனவே முதல் சுற்றில் விளையாடாமலேயே இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட விளையாடாமல் காலிறுதி வரை வந்துவிட்டார் அல்மாக்ரோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...