திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சென்னை ஓபன்: இறுதிச்சுற்றில் டிப்சரேவிச்-ரயோனிக்

சென்னை, ஜன. 7: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இறுதிச்சுற்றில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச், கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) நடைபெறுகிறத

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:31 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஜன. 7: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இறுதிச்சுற்றில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச், கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) நடைபெறுகிறது.

 சென்னையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 31-வது இடத்தில் ரயோனிக் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 10-வது இடத்தில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ரயோனிக் முதல்முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் டிப்சரேவிச் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 120-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோ ஸýயேடாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

 அல்மாக்ரோ அவுட்: முதல் அரையிறுதி ஆட்டத்தில் அல்மாக்ரோவும், ரயோனிக்கும் மோதினர். முதல் கேமில் தனது சர்வீûஸ கைப்பற்றினார் அல்மாக்ரோ. 2-வது கேமில் ரயோனிக் 2 ஏஸ் சர்வீஸ்களை அடித்து தன்னுடைய சர்வீûஸ வசப்படுத்தினார். 5-வது கேமில் மோசமான ஸôர்ட்களால் பின்னடைவைச் சந்தித்தபோதும், கடைசிக் கட்டத்தில் போராடி தனது சர்வீûஸ மீட்டார் அல்மாக்ரோ. 6-வது கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ரயோனிக், அதை எளிதாக வென்றார். 7-வது கேமில் அபாரமாக ஆடிய ரயோனிக், அல்மாக்ரோவின் சர்வீûஸ முறியடித்து 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு அல்மாக்ரோ போராடினாலும், ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை. இதனால் ரயோனிக் 6-4 என்ற கணக்கில் வென்று முதல் செட்டை 34 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

 முதல் செட்டை இழந்ததால் பதற்றமடைந்த அல்மாக்ரோ இரண்டாவது செட்டின் முதல் கேமில் இரண்டு ஏஸ் சர்வீஸ்களை அடித்து அந்த கேமை எளிதாக வென்றார். 4-வது கேமில் ரயோனிக்கின் அதிவேக சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். இதனால் அந்த செட்டில் ஒரு சர்வீûஸகூட இழக்காமல் எளிதாக வென்றார் ரயோனிக்.

 இந்த கேமில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வெற்றிப்புள்ளிகளை பெற்றார் ரயோனிக். முதல் 8 கேம்களின் முடிவில் இருவரும் 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். ஆனால் 9-வது கேமில் நல்ல ஷார்ட்களை ஆடிய ரயோனிக், அதில் அல்மாக்ரோவின் சர்வீûஸ முறியடித்தார். 10-வது கேமில் ரயோனிக்கின் சர்வீûஸ முறியடிக்க அல்மாக்ரோ போராடினார். ஆனால் ரயோனிக், மூன்று ஏஸ் சர்வீஸ்களை அடித்து அந்த கேமை வென்று, இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 38 நிமிடங்கள் நீடித்தது.

 போராடிய ஸýயேடா: மற்றொரு அரையிறுதியில் இந்தப் போட்டியில் அதிகபட்ச தரவரிசையைக் கொண்ட செர்பியாவின் டிப்சரேவிச், ஜப்பானின் கோ ஸýயேடா ஆகியோர் மோதினர். காலிறுதியில் நடப்புச் சாம்பியன் வாவ்ரிங்காவை வீழ்த்தியிருந்ததால், அரையிறுதியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டார் ஸýயேடா.

 ஆனாலும் முதல் செட்டில் டிப்சரேவிச்சின் அபாரமான ஆட்டத்திற்கு ஸýயேடாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 2-வது கேமிலேயே தனது சர்வீûஸ டிப்சரேவிச்சிடம் இழந்தார் ஸýயேடா. 4-வது கேமில் மீண்டும் ஸýயேடாவின் சர்வீûஸ முறியடித்த டிப்ரேவிச் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். 6-வது கேமில் ஆக்ரோஸமாக ஆடிய ஸýயேடா அதில் ஒரு சர்வீûஸகூட இழக்காமல் எளிதாக வென்றார்.

 இருப்பினும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி முதல் செட்டை 7-வது கேமில் முடிவுக்குக் கொண்டு வந்தார் டிப்சரேவிச். இந்த செட் 23 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

 இரண்டாவது செட்டையும் டிப்சரேவிச் எளிதாக வென்றுவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த செட்டில் கடுமையான சவால் அளித்தார் ஸýயேடா. சில நல்ல ஷார்ட்களை அடித்த அவர், டிப்சரேவிச்சை திணறடித்தார். ஆனாலும் 5-வது கேமில் ஸýயேடாவின் சர்வீûஸ முறியடித்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் டிப்சரேவிச்.

 9 முறை டியூஸ்: ஆனால் அடுத்த கேமில் டிப்சரேவிச்சின் சர்வீûஸ ஸýயேடா முறியடிக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற 7-வது கேமில் இருவருமே அபாரமாக ஆடியதால் 40-40 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் வர, 9 முறை டியூஸ், அட்வான்டேஜ் எனச் சென்றது. இறுதியில் ஸýயேடாவின் சர்வீûஸ முறியடித்து 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் டிப்சரேவிச். இதன்பிறகு 10-வது கேமில் தனது சர்வீûஸ வசப்படுத்தி அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார் டிப்சரேவிச். இந்த செட் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நீடித்தது. இந்த முறை கோபினுக்கு அடுத்தபடியாக டிப்சரேவிச்சுக்கு சவால் அளித்தவர் ஸýயேடாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 அரையிறுதியில்

 இந்திய ஜோடி தோல்வி

 இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி - போபண்ணா ஜோடி, இஸ்ரேலின் எர்லிக் ஜோனத்தான் - ராஃப் ஜோடியிடம் 6-4, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

 அல்மாக்ரோ  அதிர்ஷ்டம்

 சென்னை ஓபனில் முதல்  முறையாக பங்கேற்ற ஸ்பெயினின்  அல்மாக்ரோ, தரவரிசை  ப்படையில் நேரடியாக

 இரண்டாவது சுற்றில்

 விளையாடத் தகுதிபெற்றார். ஆனால் அந்தச் சுற்றில் அவரை எதிர்த்து

 விளையாடவிருந்த பெல்ஜியத்தின் ஸ்டீவ் ஸ்டார்சிஸ் விலகியதால்,

 நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

 காலிறுதியில் ஜப்பானின்  யூச்சி சுகிதாவை போராடி

 வென்ற அவர், அரையிறுதியில் தோல்வி கண்டார். ஒரு வெற்றியோடு அரையிறுதி வரை முன்னேறிய

 அல்மாக்ரோ அதிர்ஷ்டக்காரர்தான். ஆனால் அரையிறுதியில் அதிர்ஷ்டம்  துணை நிற்கவில்லை.

 

 அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி

 இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி - போபண்ணா ஜோடி, இஸ்ரேலின் எர்லிக் ஜோனத்தான் - ராஃப் ஜோடியிடம் 6-4, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.