கோவை, ஜூலை 15: கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தகுதிப் போட்டியில் இரண்டாம் சுற்றில் இரு இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. கோவை பெர்க்ஸ் பள்ளி டென்னிஸ் மையத்தில் சனிக்கிழமை தகுதிப் போட்டியின் முதல் சுற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்றும் நடைபெற்றன.
கொரியாவின் ஹியூன் வூ நம், இந்தியாவின் ஸôபாஸ் கானை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார்.
மற்றொரு கொரிய வீரர் ஜே மின் சீல், இந்தியாவின் எஸ்.கே. முகுந்தை 6-0, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார்.
இந்தியாவின் ரிஸப் தேவ் ராமன், முர்தஸô லோகானியை 6-4, 7-5 என்ற நேர் செட்களிலும் ஆதித்ய திவாரி சிங்கப்பூரின் ராய் ஹாப்ûஸ 6-0, 6-1 என்ற நேர் செட்களிலும் வென்றனர்.
கார்விக் பத்ரா, ரோனக் மனுஸôவை 6-4, 7-6 என்ற நேர் செட்களிலும் சந்தனு ராஜ்புத், திபிந்தர் பெயின்ûஸ 6-3, 4-6, 6-4 என்ற செட்களிலும் வென்றனர்.
இந்தியாவின் லக்ஸித் சூட், தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள சக வீரர் தேஜாஸ் சாகுல்கரை 5-7, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
இந்திய வீரர் சவுரங் சிங், சக நாட்டு வீரர் பரீஸ் முகமதை 6-3, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் வென்றார். தகுதிப் போட்டியின் இரண்டாம் சுற்றில் வென்ற 8 வீரர்களும் பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். பிரதானப் போட்டி திங்கள்கிழமை தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

