கோவை, ஜூலை 18: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு இந்தியாவின் விஜய் சுந்தர், ரஞ்சித் விரலி முருகேசன் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமி ஆகியற்றின் சார்பில் இப்போட்டி கோவை, பெர்க்ஸ் பள்ளி டென்னிஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஞ்சித் விரலி முருகேசன் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் யாங் லூவையும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாகெத் மைனேனி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீரர் விக்னேஸ்வரன் ரமேஷையும், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள என்.விஜய் சுந்தர் பிரசாந்த் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் தேஜாஸ் சாகுல்கரையும் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.
கொரியாவின் ஹியூன் வூ நம் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சக நாட்டு வீரர் சியோல் ஜேவையும், இந்தியாவின் கருந்தாவ் சிங் 7-6, 7-5 என்ற நேர் செட்களில் விவேக் ஷோகீனையும், அஸ்வின் விஜயராகவன் 1-6, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் சுதான்வா சீதாராமையும், ஆஸ்திரியாவின் úஸக் இட்ஸ்டெயின் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் இந்தியாவின் அஜய் செல்வராஜையும், கொரியாவின் சுக் யோங் ஜியோ 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இந்தியாவின் அபிஜித் திவாரியையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சாகெத் மைனேனி - அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கொரியாவின் ஹியூன் வூ நம்-ஜே மின் சோல் ஜோடியையும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் விஜய் சுந்தர் பிரஷாந்த்- காஸô விநாயக் சர்மா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் சக நாட்டைச் சேர்ந்த எல்வின் அந்தோணி- பரீஸ் முகமது ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
கொரியாவின் சுக் யோங் ஜியோங்- சியோங் குக் ஓ ஜோடி 7-6, 6-1 என்ற நேர் செட்களில் இந்தியாவின் அபிஜித் திவாரி- அஸ்வின் விஜயராகவன் ஜோடியையும், இந்தியாவின் விவேக் ஷோகீன்- சுதன்வா சீதாராம் ஜோடி 3-6, 7-5, 10-4 என்ற செட் கணக்கில் குனால் ஆனந்த்- அஜய் செல்வராஜ் ஜோடியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

