கோவை சர்வதேச டென்னிஸ்: சாகேத்- அருண் ஜோடி சாம்பியன்

கோவை, ஜூலை 20: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி- அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடி பட்டம் வென்றது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டெ
Updated on
1 min read

கோவை, ஜூலை 20: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி- அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடி பட்டம் வென்றது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமி ஆகியவற்றின் சார்பில் இப் போட்டி நடைபெற்றது.

 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சாகேத் மைனேனி- அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடியும், விஜய் சுந்தர் பிரசாந்த்- காஸô விநாயக் சர்மா ஜோடியும் மோதின.

 தொடக்கம் முதலே சாகேத் மைனேனி- அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடி சிறப்பாக ஆடியது.

 இதனால் மைனேனி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி கண்டு சாம்பியன் ஆனது.

 ஆடவர் ஒற்றையர் பிரிவு: வெள்ளிக்கிழமை நடந்த ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொரியாவின் சுக் யோங் ஜியோங், 2-வது இடத்தில் உள்ள சாகெத் மைனேனியுடன் மோதினார்.

 முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் மைனேனி வென்றார். அடுத்த செட்டை 6-4 என்ற கணக்கில் சுக் யோங் ஜியோங் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற டைபிரேக்கர் சுற்றில் ஜியோங் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக மைனேனி விலகினார். இதனால் ஜியோங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் என்.விஜய்சுந்தர் பிரசாந்த், 6-வது இடத்தில் உள்ள கருண் உதய்சிங் ஆகியோர் மோதினர்.

 முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய விஜய்சுந்தர் பிரசாந்த், இரண்டாவது செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்தார். பின்னர் நடைபெற்ற டைபிரேக்கர் சுற்று 6-2 என்ற கணக்கில் சுந்தர் வசமாக அவர் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். சனிக்கிழமை நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் என்.விஜய்சுந்தர் பிரசாந்த், கொரியாவின் சுக் யோங் ஜியோங் ஆகியோர் மோதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com