சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தேசிய கிளப் வாலிபால்: அரையிறுதியில் ஓ.என்.ஜி.சி.

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கிளப் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி

Updated On :21 மார்ச் 2013, 7:31 pm

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கிளப் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை பைக்கர்ஸ் வாலிபால் கிளப் சார்பில் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இப் போட்டியில் ஆடவர் பிரிவில் 8 அணிகள், மகளிர் பிரிவில் 4 அணிகள் என மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் 4-வது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு லீக் ஆட்டத்தில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி  23-25, 25-12, 25-16, 25-18 என்ற செட் கணக்கில் ஹரியாணா எச்.எஸ்.ஐ.ஐ.டி.சி. அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஓ.என்.ஜி.சி. அணி 3 வெற்றிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணி 25-20, 25-16, 22-25, 25-13 என்ற செட் கணக்கில் ஹைதராபாத் மேயர்ஸ் கிளப் அணியை தோற்கடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.