முத்தரப்புத் தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை இந்தியா எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோஹித் 60 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோச், டினோ பெஸ்ட், சமி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சார்லஸ்-பிராவோ கூட்டணி: பின்னர் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் 3 விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் விரைவாக வெளியேற்றினர். ஆனால் சார்லஸ்-பிராவோ கூட்டணி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
இருவரும் சிறப்பாக விளையாட, அணியின் ரன் விகிதம் மெதுவாக உயர்ந்த வண்ணம் இருந்தது. அணியின் ஸ்கோர் 142-க உயர்ந்தபோது 55 ரன்கள் எடுத்திருந்த பிராவோ ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் தொடக்க வீரரான சார்லஸ் சிறப்பாக ஆடி ரன் சேர்த்து வந்தார். அவர், 97 ரன்கள் (100 பந்து; 4 சிக்ஸர்; 8 பவுண்டரி) எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அவர் 8-வது விக்கெட்டாக வெளியேற, வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சமமானது. எனினும், பந்து வீச்சாளர்களான ரோச் மற்றும் பெஸ்ட் படபடப்பின்றி விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். அந்த அணி 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேற்கிந்தியத் தீவுகளின் சார்லஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
முன்னதாக, இலங்கையுடனான முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் வெற்றியை ருசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு தசைப் பிடிப்பு: இந்த ஆட்டத்தில் தோனி பேட் செய்தபோது அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அவர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். தசைப் பிடிப்பின் காரணமாக அவர் பீல்டிங் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து விராட் கோலி கேப்டனாகவும், தினேஷ் கார்த்திக் கீப்பராகவும் செயல்பட்டனர்.
""இந்த ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சம அளவில் இருந்தது. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் தோனி இல்லாதது இந்தியாவுக்குப் பின்னடைவாக அமைந்தது'' என்று கோலி தெரிவித்தார்.
இலங்கையுடன் இன்று மோதல்
முத்தரப்புத் தொடரின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் செவ்வாய்க்கிழமை மோதவுள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவின. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் கணக்கைத் தொடங்க இரு அணிகளும் முயற்சி செய்யும்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோனிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதால், இந்த ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்த ஆட்டம் ஜமைக்காவில் இரவு 8 மணிக்குத் நடைபெறுகிறது.
தோனி விலகல் - கோலி கேப்டன்
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து கேப்டன் தோனி விலகியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பீல்டிங் செய்யவில்லை. பின்னர் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் கீப்பிங் செய்தார்.
இந்நிலையில், இத்தொடரில் இனி வரும் ஆட்டங்களில் தோனி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தோனிக்கு பதிலாக அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தொடரில் இனி நடைபெறும் ஆட்டங்களில் விராட் கோலி, கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முத்தரப்புத் தொடரின் அடுத்த ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் கீப்பர் பணியைத் தொடர்வார் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


