தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆசியக் கோப்பை ஹாக்கி: தென் கொரியா வெற்றி

ஆசியக் கோப்பை ஹாக்கியின் இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நடப்புச் சாம்பியனான தென் கொரியா அணி வெற்றி பெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 2:13 am

ஆசியக் கோப்பை ஹாக்கியின் இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நடப்புச் சாம்பியனான தென் கொரியா அணி வெற்றி பெற்றது.

மலேசியாவின் ஈபோ நகரில் இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் தென் கொரியா வீரர்கள் 2-0 என்ற முன்னிலையில் இருந்தனர். இடைவேளைக்குப்பின் வெகுண்டெழுந்த இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், ஆட்டத்துக்கு 6 நிமிடங்களுக்கு முன்வரை இரு அணிகளின் கோல்களும் 3-3 என்ற சமநிலையை அடைந்தது.

ஆனால், தென் கொரியாவின் காங் மூன் கியோன் 68-வது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், இறுதியில் தென் கொரியா அணி 4-3 என்ற கணக்கில் ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.

தென் கொரியாவின் இந்த வெற்றியின் மூலம், மலேசிய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்கு தகுதி: ஆசிய கோப்பை போட்டியின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்றதால் இந்திய அணி, நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதிபெற்று விட்டது.

ஆனால், ஆசிய கோப்பையை வென்றிருந்தால் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்தியா நேரடியாகத் தகுதி பெற்றிருக்கும்.

தற்போது, 2-ம் இடத்தை பிடித்ததால், நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஓசினியா கோப்பை போட்டி முடியும் வரை இந்தியா காத்திருக்க வேண்டும். அப்போதுதான் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

பாகிஸ்தான் 3-ம் இடம்: 3-ம் இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானும், மலேசியாவும் மோதின.

இதில், பாகிஸ்தான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.