தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த வி.வேலவன், எம்.ஆர். மணிகண்டன் ஜோடி வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஏ.யோகிதா, மதுரை எஸ்.கேஷ்மா ஜோடி வெற்றி பெற்றது.
தருமபுரி மாவட்ட இறகுப் பந்து அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டிகள் தருமபுரி மாவட்ட உள்விளையாட்டரங்கில் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை அரையிறுதிப் போட்டியும், தொடர்ந்து இறுதிப் போட்டியும் நடைபெற்றன.
ஒற்றையர் பிரிவு: ஆடவருக்கான ஒற்றையர் இறகுப் பந்து இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வி.வேலவன், ஆதித்யா இளங்கோ விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வி.வேலவன் 20-22, 21-13, 21-11 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் சென்னையைச் சேர்ந்த அதிதி ஆனந்த் 21-13, 21-19 என்ற புள்ளிக கணக்கில் மதுரையைச் சேர்ந்த ஏ.யோகிதாவைத் தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு: கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் வேலூர் ரீகான், ஜே.அனீஸ் கவுசர் ஜோடி சென்னையைச் சேர்ந்த விஜய் அலோசீஸ், கே.சுனேரி ஜோடியை 21-15, 21-19 புள்ளிக் கணக்கில் வென்றனர்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பையை தருமபுரி ஏ.எஸ்.பி. கல்யாண் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஓய்வு பெற்ற மண்டல முதுநிலை மேலாளர் சி.கிருபா தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


