பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களான சேதேஷ்வர் புஜாரா, கிறிஸ் கெயில் இருவருமே ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர். இதனால் முதல் 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. சேனநாயக வீசிய 5-வது ஓவரில் புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 17 ரன்களில் ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் களம்புகுந்தார்.
மறுமுனையில் வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிய கெயில் 36 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்துவீச்சில் ஸ்டெம்பிட் ஆனார். இதனால் முதல் 10 ஓவர்களில் பெங்களூர் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
22 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெங்களூர் அணியால் கடைசி வரை சரிவிலிருந்து மீள முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதுதான் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர்.
கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கொல்கத்தா வெற்றி: பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பிஸ்லா ரன் ஏதுமின்றியும், கேப்டன் கம்பீர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் காலிஸ் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் யூசுப் பதான் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அந்த அணி 91 ரன்களை எட்டியபோது காலிஸ் விக்கெட்டை இழந்தது. அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திவாரி 24 ரன்களில் ஆட்டமிழக்க, 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கொல்கத்தா.
பெங்களூர் தரப்பில் வினய் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.2 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, 41 ரன்கள் எடுத்த காலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் தோற்றதால், அடுத்த சுற்றுக்கு முன்னேற அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கெயில் 603!
கெயில் 30 ரன்களை எட்டியபோது 600 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் 600 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் தொடர்ச்சியாக 3 ஐபிஎல் போட்டிகளில் 600 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சுருக்கமான ஸ்கோர்
பெங்களூர்-115/9
(கெயில் 33, டிவில்லியர்ஸ் 28, சுனில் நரேன் 4வி/22)
கொல்கத்தா-116/5
(ஜாக்ஸ் காலிஸ் 41, திவாரி 24, வினய் குமார் 2வி/17)
இன்றைய ஆட்டம்
மும்பை இண்டியன்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
இடம்: மும்பை, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு முடிசூட்டு விழா

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



