அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.
முதல் சுற்றில் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவிடம் தோல்வி அடைந்த ஆனந்த், இரண்டாவது சுற்றில் ரஷியாவின் அலெக்ஸாண்டர் க்ரிஷுக்குடன் மோதி மீண்டும் தோல்வியடைந்தார். இந்த நிலையில், மூன்றாவது சுற்றில் அவர் போட்டியின் முதல் இடத்தில் உள்ள டொபலோவுடன் மோதினார். கடைசி இடத்தில் உள்ள ஆனந்தை டொபலோவ் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் 31-வது நகர்த்தலின்போது ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொண்டார்கள்.
3-வது சுற்றின் முடிவில் டொபலோவ் 2.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 புள்ளிகளுடன் கார்ல்சன் 2-ம் இடத்தில் உள்ளார். 10 வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் 0.5 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார் ஆனந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.