தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை அணி அடுத்த வருட ஐபிஎல்லில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா?

லோதா அறிக்கைக்குப் பிறகு இந்த இரு அணிகளின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று இனிமேல் தான் தெரியவரும்.

News image
Updated On :14 ஜூலை 2015, 9:38 am

லோதா தலைமையிலான விசாரணைக் குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரு அணி ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது.

லோதா தலைமையிலான குழு இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் அணிகளுக்குத்தான் தடை விதித்துள்ளது. அதாவது ஐபிஎல் போட்டியில் இந்த இரு உரிமையாளர்களின் அணிகள் அடுத்த 2 வருடங்களுக்குப் பங்கேற்கமுடியாது.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வேறு நிறுவனங்கள் வாங்கிக்கொண்டால் பிறகு இந்த இரு அணிகளும் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து பங்கேற்பதில் சிக்கல் ஏற்படாது என்றே கருதப்படுகிறது. முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவும் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பது குறித்து பிசிசிஐதான் முடிவு செய்யவேண்டும் என்று கூறினார்.

இந்தியா சிமெண்ட்ஸும் ஜெய்ப்பூர் ஐபிஎல் நிறுவனமும் தங்களது அணிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டால் 2016 ஐபிஎல்-லில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்க வாய்ப்புண்டு. இல்லை, எங்கள் அணிகளை விற்கமாட்டோம், இரு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல்-லில் பங்கேற்றுக்கொள்கிறோம் என இரு அணிகளின் உரிமையாளர்களும் கூறிவிட்டால், அடுத்த இரு வருடங்களும் ஐபிஎல்-லில் 6 அணிகள் மட்டுமே போட்டி போடும். லோதா அறிக்கைக்குப் பிறகு இந்த இரு அணிகளின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று இனிமேல் தான் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.