தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐபிஎல் சூதாட்டம்: ஆதாரம் இன்றி குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன்: ராஜ் குந்த்ரா வேதனை!

முதல் நாளில் இருந்து முத்கல் கமிட்டியின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். நான் தவறு செய்ததாக ஆதாரம் எதுவும் இல்லாதபோதும் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன்.

News image
Updated On :15 ஜூலை 2015, 10:05 am

ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியும், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்புடைய கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்க வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, முன்னாள் நீதிபதிகள் அசோக் பன், ஆர். ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய மூவர் குழு செவ்வாய்க்கிழமை தண்டனை விவரத்தைத் தெரிவித்தார்கள். ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் லோதாவின் தீர்ப்பு குறித்து ராஜ் குந்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இன்று எனக்குச் சோகமான நாள். என்னுடைய நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு நான் ஒத்துழைத்தபோதும் அது எனக்கு தண்டனையே வாங்கித் தந்துள்ளது. முதல் நாளில் இருந்து முத்கல் கமிட்டியின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். நான் தவறு செய்ததாக ஆதாரம் எதுவும் இல்லாதபோதும் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன்.

என் மீதான ஆதாரத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுப்பேன். அதன்மூலம் எந்தக் காரணத்துக்காக என் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வேன். என் மீதான குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் அணி பாதிக்கப்பட்டுள்ளது தவறு என நினைக்கிறேன் என்றார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.