தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டி20 போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

Updated On :17 ஜூலை 2015, 12:39 pm

ஹராரேவில் நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்-லில் முத்திரை பதித்த 22 வயது வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா இந்தப் போட்டியில் அறிமுகமானார். அவருடைய முதல் சர்வதேச போட்டி இது. மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், அக்‌ஷர் படேல், பின்னி ஆகியோரும் முதல்முறையாக டி20 போட்டியில் அறிமுகமாகிறார்கள்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இரண்டு ஓவர்கள் அமைதியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் விஜய்யும் ரஹானேவும் அதன்பிறகு வேகமாக ஆட ஆரம்பித்தார்கள். அதிலும் விஜய் 5-வது ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். ஆறாவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் விஜய். பரபரப்பாக ஆடிவந்த விஜய், 7-வது ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர். பிறகு 10-வது ஓவரில் 33 ரன்களில் அவுட் ஆனார் கேப்டன் ரஹானே. 11-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

10 ஓவருக்குப் பிறகு இந்திய வீரர்கள் நிதானமாக ஆடியதால் ஸ்கோர் குறைவாகவே கிடைத்தது. 16-வது ஓவரில் மனிஷ் பாண்டே 19 ரன்களில் அவுட் ஆனார்.  பிறகு கெதர் ஜாதவ் 9 ரன்களிலும் பின்னி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் 55 ரன்கள் கிடைத்தன. இந்திய வீரர்களில் அதிகபட்சமாக, உத்தப்பா 39 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.