விளையாட்டில் போட்டி எப்போதும் இருக்கும். நீங்கள் தேங்கிப் போய்விட்டால், உங்களை ஒருவர் முந்திவிடுவார் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றில் அஸ்வினின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில், ஹர்பஜனை இந்திய அணியில் இருந்து வெளியேற்றியதற்குக் காரணமாக இருந்ததால் அவருடனான உறவு எப்படி உள்ளது என்கிற கேள்விக்கு அஸ்வின் அளித்த பதில்:
நான் ஆஃப் ஸ்பின் பவுலிங் செய்ய ஆரம்பித்தபோது ஹர்பஜன் சிங் தான் என் ரோல்மாடலாக இருந்தார். 2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் பவுலிங் செய்ததைப் பார்த்துதான் மீடியம் ஃபாஸ்ட் ஃபவுலராக இருந்த நான் ஆஃப் ஸ்பின்னுக்கு மாறினேன். இந்திய அணியில் அவரை நீக்கிவிட்டு நான் அணியில் இடம்பிடித்தபோது அவருடைய இடத்துக்கு நான் வந்துவிட்டதாக எண்ணவில்லை. தமிழ்நாட்டு ரஞ்சி அணியிலும் ஆஷிஷ் கபூருக்குப் பதிலாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவர் சீனியர் பவுலர். மிகவும் கடினப்பட்டுத்தான் அணிக்குள் நுழைந்தேன். இது ஓர் அணியில் இயல்பாக நடக்கக்கூடிய மாற்றம்தான். அதனால் சாதித்தவர்களின் இடத்தை நான் பிடித்ததாகவே எண்ணவில்லை.
இந்திய அணியில் என் திறமையை நிரூபித்துக்கொண்டிருந்த சமயத்திலும் இந்தக் கேள்வி எழுந்தது. என் பங்களிப்பைப் பற்றி பேசாமல் அவரைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றுகூட நினைத்தேன். பிறகுதான் இந்தப் போட்டி உலகத்தில் மக்கள் இதுபோல பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று முடிவுக்கு வந்தேன். நான் மற்றவர்களைப் பற்றி எண்ண மாட்டேன். என் திறமையை எப்படி மெருகேற்றுவது என்றுதான் பார்ப்பேன் என்றார்.
இப்போது மீண்டும் ஹர்பஜன் சிங் இந்திய அணிக்குள் நுழைந்துவிட்டார். இருவரில் ஒருவர் மட்டும்தான் அணிக்குத் தேவை என்கிற நிலை வந்தால் உங்கள் இருவருக்கும் உள்ள உறவு எப்படி இருக்கும்?
நான் எப்போதும் இதைத்தான் சொல்வேன். நீங்கள் தேங்கிப் போய்விட்டால், உங்களை ஒருவர் முந்திவிடுவார். நீங்கள் மறுபடியும் முன்னுக்கு வர பாடுபடவேண்டும். 10 வருடங்களுக்குப் பிறகு தன்னை மெருகேற்றிக் கொண்டவராக நினைக்கப்படவேண்டுமே தவிர இடம் பறிபோய்விடும் என்கிற அச்சத்தில் இருந்தார் என்று அல்ல. விளையாட்டில் போட்டி எப்போதும் இருக்கும். பில்லியன் மக்கள்தொகை உள்ள நாட்டில் நான் இந்திய அணியில் இடம்பிடித்தது அதிர்ஷ்டம் என்று எண்ணுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலை புறக்கணித்த புதுப்பட்டினம் மீனவா்கள்: அதிகாரிகள் பேச்சு நடத்தியதால் வாக்களிப்பு

ஜனநாயக கடமையாற்றிய மன நல காப்பகவாசிகள்!

முதன்முறை வாக்களித்த இளம்பெண்கள், இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமாநுஜா் அவதார திருவிழா நிறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


