இந்தியா, வங்கதேசம் ஒருநாள் போட்டி: மழையால் மீண்டும் பாதிப்பு நேருமா?

இந்தியா, வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாக்காவில் நாளை நடைபெறுகிறது.
Updated on
1 min read

இந்தியா, வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாக்காவில் நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் போட்டியும் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை உள்ளது.

தோனி தலைமையிலான இந்திய அணி, நாளை வங்கதேசத்துடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய அணி ஆடும் ஒருநாள் போட்டி இது. உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற வீரர்கள் இதிலும் இடம்பிடிப்பார்கள். முகமது ஷமிக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் ஆடுவார். முரளி விஜய் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வானதால் ஷிகர் தவனும் ரோஹித் சர்மாவும் நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இருப்பார்கள்.

மிர்புர் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானது என்று சொல்லப்பட்டாலும் மழையால் அதன் தன்மை மாறக்கூடும். ஃபதுல்லாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 185 ஓவர்கள் மட்டுமே வீசமுடிந்தது. இந்த ஒருநாள் போட்டியும் மழையால் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை 100 ஓவர்களுக்கு போட்டி நடந்தால் அதிர்ஷ்டமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com