ஒருநாள் போட்டி: தோனி, தவன் அரை சதம்!

நான்காவதாக களமிறங்கிய தோனி, ஆரம்பம் முதல் வேகமாக ஆடினார். அவருடன் இணைந்து ராயுடுவும் நன்றாக ஆடினார்.
Updated on
1 min read

மிர்புரில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.

டாஸ் வென்ற வங்கதேச அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ஜடேஜா, புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக பின்னி, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் பொறுப்புடன் ஆடினார்கள். ரோஹித் சர்மா, 29 ரன்களில் முஸ்தாபிஸுர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். கோலி 25 ரன்களில்  ஷகிப் அல் ஹசன் பந்தில் போல்ட் ஆனார். தவான் சிறப்பாக ஆடி 75 ரன்களில் ஆட்டம் இழந்தார். நான்காவதாக களமிறங்கிய தோனி, ஆரம்பம் முதல் வேகமாக ஆடினார். அவருடன் இணைந்து ராயுடுவும் நன்றாக ஆடினார். தோனி, 58 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

40 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com