இந்திய அணியை 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி தோற்கடித்ததன் எதிரொலியாக சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கெளதம், வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களால் தாக்கப்பட்டார். அவரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி எங்குப் பயணம் செய்தாலும் கூடவே சென்று கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்கும் வழக்கம் உள்ளவர், சுதிர் கெளதம். வங்கதேசத்தில் நடக்கும் ஒருநாள் தொடரையும் நேரில் பார்க்கச் சென்றுள்ளார். 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபிறகு, வங்கதேச ரசிகர்கள் சுதிர் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தினார்கள். காவல்துறையின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டார்.
தகவல் கேள்விப்பட்டவுடன் செவ்வாய் அன்று இந்திய கிரிக்கெட் வீரர்களான கோலி, ரெய்னா, அஸ்வின் ஆகியோர் சுதிரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இனிமேலும் வங்கதேச ரசிகர்களால் எதுவும் தொல்லை நேர்ந்தால் தனக்கு போன் செய்யுமாறு கோலி, சுதிரிடம் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதை எண்ணி சுதிர் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார்.
தன் மீதான தாக்குதல் குறித்து காவல்துறையில் அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால் பாதுகாப்புக்கு இரு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது சுதிருக்கு நான்கு காவலர்கள் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


