பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

தோனிக்கு எதிரான கிரிமினல் வழக்குக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

வார இதழ் அட்டைப் படத்தில் ஹிந்துக் கடவுளான மகாவிஷ்ணுவை அவமதிக்கும் தோற்றத்தில் இருந்ததாக குற்றம்சாட்டி

Updated On :

வார இதழ் அட்டைப் படத்தில் ஹிந்துக் கடவுளான மகாவிஷ்ணுவை அவமதிக்கும் தோற்றத்தில் இருந்ததாக குற்றம்சாட்டி இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
 இதுதொடர்பாக மகேந்திர சிங் தோனி தாக்கல் செய்த மனுவையும், இதேபோன்ற மற்றொரு விவகாரத்துக்காக தொடரப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒன்றாக விசாரித்தது.
 அப்போது உச்ச நீதிமன்றம் கூறுகையில், "தோனிக்கு எதிரான கிரிமினல் வழக்குக்கு தடை விதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது; இந்த விவகாரத்தில் தோனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிடப்படுகிறது' என்று அறிவித்தது.
 வர்த்தக வார இதழ் ஒன்றின் அட்டைப் படத்தில், மகாவிஷ்ணு தோற்றத்தில் தோனியின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அதில், தோனி தனது கையில் பிரபல நிறுவனத்தின் காலனியை வைத்திருப்பார்.
 இந்நிலையில், தோனிக்கு எதிராக பெங்களுரூ கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஜெயகுமார் ஹிரேமட் என்பவர் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த நீதிமன்றம், தோனிக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் 295, 34 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டது. அத்துடன், தோனியை நேரில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இதைத் தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தோனி மேல்முறையீடு செய்தார்.
 ஆனால், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் கிரிமினல் வழக்குக்கு தடை விதிப்பதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.