ஆஸி.க்கு எதிரான 2வது டி-20: இந்திய அணிக்கு 195 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பின்னர் அதிரடி காட்டிய தொடக்க ஆட்டக்காரரான மேத்திவ் வாட் 32 பந்துகளில் 58 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 38 பந்துகளில் 46 ரன்களையும் எடுத்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யுவேந்திர சஹால், ஸ்ரதுல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...