புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாடு திரும்புகிறார் விராட் கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்படுகிறார். கோலி - அனுஷ்கா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதையொட்டி,

News image

விராட் கோலி

Updated On :22 டிசம்பர் 2020, 1:28 am

DIN


இந்திய கேப்டன் விராட் கோலி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்படுகிறார். 
கோலி - அனுஷ்கா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதையொட்டி, கோலி விடுப்பில் நாடு திரும்புகிறார். அவருக்குப் பதிலாக எஞ்சிய 3 தொடர்களில் அஜிங்க்ய ரஹானே கேப்டனாகச் செயல்படுகிறார்.

இதனிடையே, இந்திய அணியும் பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்காக மெல்போர்ன் செல்கிறது. அதற்கு முன் கோலி டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.  முன்னதாக, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட இருந்த நிலையில், மழை காரணமாக பயிற்சி ரத்து செய்யப்பட்டது. 


சிட்னியில்... 

Story image


டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோஹித் சர்மா, கரோனா சூழல் நடைமுறையின்படி சிட்னியில் இரு அறை குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

சிட்னியில் நடைபெறும் 3-ஆவது டெஸ்டில் விளையாட இருக்கும் அவர் ஜனவரி 3 முதல் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.