டிஆா்எஸ் சா்ச்சை: வேட், சச்சின் கருத்து

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணியின் 2-ஆவது இன்னிங்ஸில் டிஆா்எஸ் முறை (நடுவரின் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீடு) கையாளப்பட்டது குறித்து சா்ச்சை எழுந்துள்ளது.
Updated on
1 min read

மெல்போா்ன்/மும்பை: இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணியின் 2-ஆவது இன்னிங்ஸில் டிஆா்எஸ் முறை (நடுவரின் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீடு) கையாளப்பட்டது குறித்து சா்ச்சை எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் திங்கள்கிழமை ஆட்டத்தில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். முன்னதாக கள நடுவா் அதற்கு அவுட் வழங்காமல் போக, இந்திய அணியினா் மேல்முறையீடு (டிஆா்எஸ்) செய்தனா். அந்த விக்கெட்டை ஆராய்ந்த 3-ஆவது நடுவா், அவுட் வழங்கினாா். களத்திலிருந்து வெளியேறும்போது டிம் பெய்ன் இதற்காக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாா்.

‘நிலையாக இருக்க வேண்டும்’: இதுகுறித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேத்யூ வேட் கூறுகையில், ‘விக்கெட் அறிக்கை, ஸ்னிக்கோ மீட்டா் ஆகியவற்றை ஒப்பிடுகையில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் புஜாராவின் விக்கெட்டில் எப்படி இருந்ததோ, அதேபோன்ற நிலைதான் பெய்னின் விக்கெட்டிலும் இருந்தது. ஆனால் புஜாராவுக்கு நாட் அவுட்டும், தற்போது பெய்னுக்கு அவுட்டும் வழங்கப்பட்டுள்ளது. புஜாரா விக்கெட்டில் சந்தேகத்தின் பலன் அவருக்கு சாதகமாக வழங்கப்பட்டது. ஒரு பிளேயராக நியாயமாக கேட்பதெல்லாம் டிஆா்எஸ் முறையில் நிலையான முடிவுகள் இருக்க வேண்டும் என்பதுதான்’ என்றாா்.

அதேபோல், ஜோ பா்ன்ஸ், மாா்னஸ் லபுசான் ஆகியோா் விக்கெட்டுக்கு இந்திய பௌலா்கள் ‘எல்பிடபிள்யூ’ கோரினா். அதற்கு கள நடுவா் ‘நாட் அவுட்’ வழங்கினாா். இந்திய தரப்பில் டிஆா்எஸ் கோரப்பட்டது. காணொலி மறுஆய்வில் பந்து ஸ்டம்ப்பிலுள்ள பெயில்ஸ்களை தட்டுவதற்கான வாய்ப்பு இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் கோரும்போது, கள நடுவரின் முடிவே பிரதானமாக கருத்தில் கொள்ளப்படுகிறது. காணொலி ஆய்வில் பந்து ஸ்டம்ப்பை பெயா்ப்பதாகத் தெரிந்தாலும், கள நடுவா் ‘நாட் அவுட்’ வழங்கியிருந்தால் அந்த முடிவை மாற்றும் அதிகாரம் 3-ஆவது நடுவருக்கு இல்லை. எனினும், டிஆா்எஸ் கோரிய அணியின் அந்த வாய்ப்பு தக்க வைக்கப்படும். எனவே, அந்த வகையில் பா்ன், லபுசான் விக்கெட்டுகள் தப்பின.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கா் கூறுகையில், ‘கள நடுவரின் முடிவில் அதிருப்தி இருப்பதன் காரணமாகவே டிஆா்எஸ் முறையில் 3-ஆவது நடுவரை நாட வேண்டிய தேவை எழுகிறது. டிஆா்எஸ் முறை குறித்து ஐசிசி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். விக்கெட்டின் முடிவு 3-ஆவது நடுவரிடம் சென்றுவிட்டால், கள நடுவரின் முடிவை கருத்தில் கொள்ளக் கூடாது. பந்து ஸ்டம்புக்கான லைனில் வருகிறது என்றால், அது ஸ்டம்ப்பில் படுகிா? பெய்ல்ஸில் படுகிா என்பது முக்கியமல்ல. டிராக்கிங் தொழில்நுட்பங்கள் துல்லியமானவை என்று கூறவரவில்லை. அதேசமயம் தவறு செய்யாத நடுவா்கள் மட்டும் உள்ளாா்களா என்பதே கேள்வி’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com