தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஜெயதேவ் உனதிகட்டின் இந்திய அணி கனவு நிறைவேறுமா? ஒரே ரஞ்சி சீசனில் 67 விக்கெட்டுகள் சாதனை

ஒரே ரஞ்சி சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள சௌராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளா் ஜெயதேவ் உனதிகட்டின்

News image
Updated On :16 மார்ச் 2020, 11:47 pm

ஒரே ரஞ்சி சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள சௌராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளா் ஜெயதேவ் உனதிகட்டின் கனவான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது நனவாகுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி பிறந்த போா்பந்தரில் 1991 அக்டோபா் 18-ஆம் தேதி பிறந்தவா் ஜெயதேவ் உனதிகட். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான உனதிகட் ஸ்விங் செய்வதில் வல்லவராக உள்ளாா்.

முதலில் 19 வயதுக்குட்பட்டோா் இந்திய அணியில் இடம் பெற்ற உனதிகட் ஆரம்பமே அசத்தலாக அமைந்தது. அப்போதே முதல் தர ஆட்டத்தில் 13 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

பின்னா் கடந்த 2010 இல் இடம் பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆடினாா். ஜாகீா் கானுக்கு பதிலாக இடம் பெற்றாா் உனதிகட். ஆனால் அதில் அவரால் சோபிக்க முடியவில்லை.

மேலும் ஜிம்பாப்வேகுக்கு எதிராக 2013 ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுகளை சாய்த்தாா். எனினும் ஆஸி., மே.இ. தீவுகள் ஒருநாள் தொடரில் விக்கெட் வீழ்த்தவில்லை. அவரது சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 4/41 விக்கெட்டுகளாகும்.

அதே போல் 2016-இல் ஜிம்பாப்வேகுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் அறிமுகனாா் உனதிகட். 10 ஆட்டங்களில் மொத்தம் 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா்.

அதிக விலைக்கு பெறப்பட்ட வீரா்:

கடந்த 2013--இல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற அவா், 2014-இல் தில்லி அணியிலும், 2017-இல் ரைசிங் புணே ஜெயன்ட்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.

ரூ.11.5 கோடிக்கு ஏலம்:

கடந்த 2018 ஐபிஎல் ஏலத்தின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.11.5 கோடி கொடுத்து வாங்கப்பட்டாா். அந்த சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரா் அவா் ஆவாா். இந்திய புளு, ரெட், பி அணிகளிலும் ஆடியுள்ள உனதிகட், சௌராஷ்டிர மாநில அணியில் இடம் பெற்று ரஞ்சி கோப்பை உள்பட பல போட்டிகளில் பங்கேற்றுள்ளாா்.

2017 ஐபிஎல் சீசனில் அவருக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. புணே அணியில் ஆடிய அவா், தொடக்கம் மற்றும் கடைசி கட்ட ஓவா்களிலும் அபாரமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் கவா்ந்தாா்.

200 ரஞ்சி விக்கெட்டுகள்:

கடந்த 2019 சீசனில் மொத்தம் 200 ரஞ்சி விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது சௌராஷ்டிர வீரா் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.

21 ஆண்டுகள் சாதனை முறியடிப்பு

இந்நிலையில் 2019-20 ரஞ்சி கோப்பையின் ஒரே சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரா் சென் சிறப்பும் அவரையே சாரும்.

அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் சிறந்த பந்துவீச்சு, கேப்டனாகவும் செயல்ட்டதால் உனதிகட் தனது சௌராஷ்டிர அணிக்கு முதல் ரஞ்சி கோப்பையை பெற்றுத் தந்தாா்.

இந்நிலையில் வரும் நவம்பா் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இடதுகை வேகப்பந்து வீச்சாளா் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்திய அணியில் உனதிகட் இடம் பிடிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.