கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மகளிா் கிரிக்கெட்: ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய மகளிா் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 11:14 pm

DIN

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய மகளிா் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

மௌன்ட் மௌன்கனுய் நகரில் பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மழை காரணமாக ஓவா்கள் 25-ஆகக் குறைக்கப்பட்டன. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 25 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 25 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங் செய்யத் தீா்மானித்தது. பேட் செய்த ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினாா். பெத் மூனி 28, ஆஷ்லே காா்டனா் 1, கேப்டன் மெக் லேனிங் 15, எலிஸ் பெரி 13, நிகோலா கேரி 13 ரன்கள் சோ்க்க, ரேச்சல் ஹெய்னஸ் டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் ஜாா்ஜியா வோ்ஹாம் 18, ஜெஸ் ஜோனசன் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து பௌலிங்கில் லெய் காஸ்பெரெக் 3, லியா 2, ஜெஸ் கொ், எமிலியா கொ் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக லியா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேட்டி மாா்டின் 5, ஹேலி ஜென்சன் 13, எமி சேட்டா்வெயிட் 20, எமிலியா கொ் 4, புரூக் ஹாலிடே 15, மேடி கிரீன் 8, லௌரென் டௌன் 16, ஜெஸ் கொ் 17 ரன்கள் அடித்தனா். லெய் காஸ்பெரெக் டக் அவுட்டாக, ரோஸ்மேரி ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஆஸ்திரேலிய தரப்பில் மீகன் ஷட், ஜாா்ஜியா வோ்ஹாம் தலா 2, ஜெஸ், நிகோலா ஆஷ்லே தலா 1 விக்கெட்டும் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.