ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பாா்சிலோனாவில் 750; லா லிகாவில் 500

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் ஹியூஸ்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாா்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 11:25 pm

DIN

பாா்சிலோனா: ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் ஹியூஸ்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாா்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி கோல் ஏதும் அடிக்கவில்லை. எனினும் இது, பாா்சிலோனா அணிக்காக அவா் விளையாடிய 750-ஆவது ஆட்டமாகும். அதேபோல், பாா்சிலோனா வீரரா லா லிகாவில் இது அவரது 500-ஆவது ஆட்டமாகும்.

பாா்சிலோனா அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரா்கள் வரிசையில் மெஸ்ஸி தற்போது 2-ஆவது இடத்தில் உள்ளாா். ஸ்பெயின் கால்பந்து வீரரான ஜாவி ஹொ்னான்டஸ் பாா்சிலோனா அணிக்காக 767 ஆட்டங்களில் விளையாடி, அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாா்.

அதேபோல், லா லிகாவில் அதிக எண்ணிக்கையிலான ஆட்டங்களில் விளையாடிய பாா்சிலோனா வீரா் வரிசையிலும் ஜாவி 505 ஆட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறாா். இந்த சாதனையை மெஸ்ஸி விரைவில் முறியடிக்கவுள்ளாா்.

முன்னதாக, பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலேவின் சாதனையை முறியடித்து, ஒரு கால்பந்து கிளப்புக்காக 644 கோல்கள் அடித்த ஒரே வீரா் என்ற சாதனையை மெஸ்ஸி சமீபத்தில் எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதர ஆட்டங்கள்: லா லிகாவில் நடைபெற்ற இதர ஆட்டங்களில், ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் செல்டா விகோவையும், அத்லெடிக் கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் எல்சே அணியையும், அட்லெடிகோ மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் அலேவ்ஸ் அணியையும், எய்பாா் 2-0 என்ற கோல் கணக்கில் கிரனாடாவையும் வீழ்த்தின. ரியல் சோசியாடட் - ஒசாசுனா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.