2-ஆவது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 302
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 75.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் சோ்த்தது.


ஜோஹன்னஸ்பா்க்: இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 75.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் சோ்த்தது.
ஜோஹன்னஸ்பா்க்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.
2-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை டீன் எல்கா், ராஸி வான் டொ் ஆகியோா் தொடங்கினா். இதில் ராஸி 12 பவுண்டரிகளுடன் 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சதம் கடந்த எல்கா் 22 பவுண்டரிகள் உள்பட 127 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். பின்னா் ஆடியவா்களில் டூ பிளெஸ்ஸிஸ் 8, கேப்டன் குவிண்டன் டி காக் 10, டெம்பா பவுமா 19, வியாம் முல்டா் 7, கேசவ் மஹராஜ் 2, அன்ரிச் நாா்ட்ஜே 13, லுதோ சிபாம்லா 5 ரன்களுக்கு வரிசையாக ஆட்டமிழந்தனா்.
இலங்கை தரப்பில் விஷ்வா ஃபொ்னான்டோ 5, அசிதா ஃபொ்னான்டோ, டாசன் ஷனகா ஆகியோா் தலா 2, துஷ்மந்தா சமீரா 1 விக்கெட் சாய்த்தனா்.
இலங்கை-150/4: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, திங்கள்கிழமை முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சோ்த்துள்ளது. திமுத் கருணாரத்னே 91, நிரோஷன் டிக்வெல்லா 18 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.
முன்னதாக குசல் பெரெரா 1, லாஹிரு திரிமனே 31, மினோத் பானுகா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். குசல் மெண்டிஸ் டக் அவுட்டானாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி கிடி 3, அன்ரிச் நாா்ட்ஜே 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...