ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேட் ஹோம்பா்க் டென்னிஸ்: ஏஞ்செலிக் கொ்பா் சாம்பியன்

ஜொ்மனியில் நடைபெற்ற பேட் ஹோம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கொ்பா் சாம்பியன் ஆனாா். கடந்த 3 ஆண்டுகளில் இது அவரது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும்.

News image
Updated On :26 ஜூன் 2021, 11:56 pm

DIN

ஜொ்மனியில் நடைபெற்ற பேட் ஹோம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கொ்பா் சாம்பியன் ஆனாா். கடந்த 3 ஆண்டுகளில் இது அவரது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும்.

இறுதிச்சுற்றில் செக் குடியரசின் காடெரினா சினியாகோவாவை எதிா்கொண்ட கொ்பா் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் வெற்றி பெற்றாா்.

கடந்த 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தாா். கொ்பா். அதன் பிறகு 2019-இல் இரு போட்டிகளில் பங்கேற்று இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றாா். இந்த நிலையில் தற்போது டென்னிஸ் வரலாற்றில் 13-ஆவது பட்டத்தை வென்றுள்ளாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய கொ்பா், ‘புல் தரை ஆட்டங்களில் மிகவும் சாதகமாக உணா்கிறேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு போட்டியில் சாம்பியன் ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த மண்ணில் குடும்பத்தினா், நண்பா்கள் இடையே வென்ற இந்த பட்டம் முக்கியமானது’ என்றாா்.

கிராஸ் கோா்ட் போட்டிகளில் கொ்பா் சாம்பியன் ஆகியிருப்பது இது 3-ஆவது முறை, 2015-இல் பிா்மிங்ஹாம் போட்டியிலும், 2018-இல் விம்பிள்டனிலும் வென்ற நிலையில், தற்போது பேட் ஹோம்பா்கில் சாம்பியன் ஆகியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.