கண்கவர் வாணவேடிக்கைகளுடன் நிறைவுபெற்ற ஒலிம்பிக் திருவிழா

கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமையுடன்) நிறைவடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமையுடன்) நிறைவடைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் நிறைவுவிழா மைதானத்தில் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டு முடித்துவைக்கப்பட்டது. கடந்த 2020 ஜூலை - ஆகஸ்டில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, கரோனா தொற்று சூழல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

கரோனா சூழலின் தீவிரம் குறையாத நிலையில் இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் சிக்கல் இருந்தது. டோக்கியோ நகர மக்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், அத்தகைய சவால்களைக் கடந்து பெரிதாக பாதிப்புகள் ஏதும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களின் மன நலன் குறித்து பெருத்த விவாதங்கள் எழுந்த நிலையில், பல வீரர்கள் வெற்றியை சாத்தியப்படுத்தி தோல்வியை சந்தித்த கலவையான அம்சங்கள் கொண்ட ஒலிம்பிக் போட்டியாக இது அமைந்தது.

இந்த ஒலிம்பிக்கின் தொடக்க நிகழ்ச்சியானது ‘ஒன்றிணைந்து முன்னேறுதல்’ என்பதை கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், நிறைவு நிகழ்ச்சியானது ‘நாம் பகிர்ந்துகொள்ளும் உலகம்’ என்ற கருத்தைக் கொண்டிருந்தது.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com