47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோனியின் படத்தை பகிர்ந்த ஜான் சீனா

ஜான் சீனா இந்திய பிரபலம் ஒருவரின் படத்தைப் பகிர்வது இது முதல்முறை இல்லை.

News image
Updated On :14 நவம்பர் 2021, 8:57 am

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள போதிலும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

டி20 உலகக் கோப்பை போட்டயில் இந்திய அணியின் ஆலோசகராகவும் தோனி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரபல டபிள்யூ.டபிள்யூ.இ. மல்யுத்த வீரர் ஜான் சீனா, தோனியின் படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனி யாருடனோ கைகுலுக்குவதைப் போல இருக்கும் இந்த படம் இணையத்தில் உடனடியாக வைரலானது. ஆனால், ஜான் சீனா அதில் எதவும் குறிப்பிடவில்லை. 

ஜான் சீனா இந்திய பிரபலம் ஒருவரின் படத்தைப் பகிர்வது இது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே, பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரின் படங்களைப் பகிர்ந்துள்ளார். 

கடந்த மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகப் பட்டம் வென்றது. ஆனால், தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுடன் ஓய்வு பெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இருப்பினும், அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்த தோனி, தனது கடைசி போட்டி நிச்சயம் சென்னையில் தான் நடைபெறும் எனக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறும் நிலையில், தோனியை சிஎஸ்கே தக்க வைப்பது உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.