
டி20 உலகக் கோப்பையுடன், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவர் உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.
இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
பிசிசிஐ விதிகளின்படி ஒரே நபர் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது. அதன்படி, ராகுல் டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதற்கு மத்தியில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்படலாம் எனக் செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு லட்சுமண் மறுத்த தெரிவித்திருந்த போதிலும் பின்னர், பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலியே தனிப்பட்ட முறையில் லட்சுமணிடம் பேசியதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க | குழந்தைகள் நாள்: நேருவும் குழந்தைகளும்
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பை லட்சுமண் ஏற்கவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கங்குலி உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.