எரிபொருள் பற்றாக்குறையால் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை: இலங்கை கிரிக்கெட் வீரர்

எரிபொருள் பற்றாக்குறையால் கிரிக்கெட் பயிற்சிக்கூட எடுக்க முடியவில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே கருத்துத் தெரிவித்துள்ளார். 
எரிபொருள் பற்றாக்குறையால் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை: இலங்கை கிரிக்கெட் வீரர்

எரிபொருள் பற்றாக்குறையால் கிரிக்கெட் பயிற்சிக்கூட எடுக்க முடியவில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே கருத்துத் தெரிவித்துள்ளார். 

2019 முதல் இலங்கை அணிக்காக விளையாடும் இளம் கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே. 1948க்குப் பிறகு நாட்டு மக்கள் தொகையில் 10% மட்டுமே எரிபொருள் வாங்கும் நிலைமைக்கு அந்நாட்டின் பொருளாதார இழப்பு நிகழ்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஆசியா கோப்பை வரவிருக்கிறது. பிஎஸ்எல் அட்டவணை தயார்படுத்தப்பட்டது. உலக கோப்பையும் வரவிருக்கிறது. நான் கொழும்பு மற்றும் பல்வேறு இடங்களுகளிலுள்ள கிளப்புகளுக்கு சென்று விளையாடுவேன். இப்போது என்னால் அங்கு செல்ல முடியவில்லை. 2 நாட்களாக என்னால் எங்குமே செல்ல முடியவில்லை. நீண்ட வரிசையில் நின்று 2 நாட்களுக்குப் பிறகு எரிபொருள் கிடைத்து விட்டது. 10 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் கிடைத்தது. அதுவும் இன்னும் 2,3 நாட்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். இனிமேல் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. 

இப்போதையா ஆட்சி பற்றி எதுவும் சொல்ல முடியாது. எதுவும் சரியாகப் போகவில்லை என்பதைத் தவிர. ஆனால் சரியான ஆட்கள் ஆட்சிக்கு வந்து எல்லாம் சரியாகும் என நம்புகிறேன். 

டெஸ்ட் போட்டியை ரத்து செய்யாமல் விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிவாகம் மற்றும் வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com