
மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 574/8 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 175 ரன்களை விளாசினார்.
பின்னா், தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 108/4 ரன்களை சோ்த்திருந்தது. இரண்டாம் நாள் முடிவில், இந்தியா 466 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இதையடுத்து, இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசியது. குறிப்பாக, பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா பந்துவீச்சிலும் இலங்கையை திணறடித்தார். நிசாங்காவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியெறினர். 174 ரன்கள் எடுத்திருந்தபோது, இலங்கை ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா சார்பாக் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். 49 ஆண்டுகளில் முதல்முறையாக, ஒரே டெஸ்ட் போட்டியில் 150 ரன்களும் ஐந்து விக்கெட்டையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
400 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள இந்தியா, முதல் இன்னிங்ஸில் போதுமான ரன்கள் எடுக்காத இலங்கையை பாலோ ஆன் செய்ய பணித்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திரிமானே, கருணரத்னே ஆகியோர் களம் இறங்கி ஆடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.